Thalapathy Vijay GOAT Update: விஜய்யின் கோட் படத்தின் இணைந்த இன்னொரு ஹீரோயின்! சீரியல் டூ சினிமாவுக்கு கம்பேக்-actress kaniha joins cast in thalapathy vijay goat movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay Goat Update: விஜய்யின் கோட் படத்தின் இணைந்த இன்னொரு ஹீரோயின்! சீரியல் டூ சினிமாவுக்கு கம்பேக்

Thalapathy Vijay GOAT Update: விஜய்யின் கோட் படத்தின் இணைந்த இன்னொரு ஹீரோயின்! சீரியல் டூ சினிமாவுக்கு கம்பேக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 24, 2024 08:30 PM IST

விஜய்யின் கோட் படத்தில் சிநேகா, லைலா ஆகியோரை தொடர்ந்து இன்னொரு ஹீரோயினும் முக்கிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார். தற்போது வரை இந்த படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

கோட் படத்தில் தளபதி விஜய்
கோட் படத்தில் தளபதி விஜய்

இதுதவிர படத்தில் முன்னாள் ஹீரோயின்களான சிநேகா, லைலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது படத்தின் இன்னொரு ஹீரோயினாக கனிகாவும் இணைந்துள்ளார்.

நடிகை கனிகா, தனது இன்ஸ்டாவில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து கனிகா கோட் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படக்குழுவினரும் அதை உறுதி செய்துள்ளனர்.

ஃபைவ் ஸ்டார் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கனிகா, மாதவனுடன் எதிரி, அஜித்துடன் இணைந்து வரலாறு படங்களில் நடித்தார். இதன் பின்னர் மலையாள படங்களில் கவனம் செலுத்திய அவர் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கனிகா கம்பேக்

திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் கனிகா, தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் நடித்து வந்தததால் தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த கனிகா, விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். தமிழில் இந்த படம் இவருக்கு கம்பேக் படமாக அமைந்திருக்கும் நிலையில், தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

2008இல் சாப்ட்வேர் என்ஜியரை திருமணம் செய்து கொண்ட கனிகாவுக்கு 13 வயதில் மகன் உள்ளார். குடும்பம், நடிப்பு என இரண்டையும் கவனித்து வருகிறார் கனிகா.

விஜய்யின் கோட் படத்தில் பல்வேறு முன்னாள் நட்சத்திரங்கள் இடம்பிடித்துள்ளார்கள். டாப் ஹீரோக்களாக வலம் வந்த மோகன், பிரசாந்த், பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பார்வதி நாயர், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, கஞ்சா கருப்பு, பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபு படத்தில் இடம்பெறும் வைபவ், அரவிந்த ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. படம் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

கோட் படம் ஃபஸ்ட் லுக்

கோட் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் 2024ஆம் ஆண்டை ரசிகர்கள் குஷியுடன் வரவேற்கும் விதமாக புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என முற்றிலும் ஆங்கில வார்த்தைகளை கொண்ட தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கோட் என சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் தளபதி விஜய் 19 வயது டீன் ஏஜ் பையன், இளைஞராக நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களில் புதிய போஸ்டரும், புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

கோட் படத்தை பற்றி

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019இல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

1970களில் அமெரிக்காவில் போயிங் விமானம் ஒன்றை கடத்தி, பணத்தை திருடுவிட்டு எஸ்கேப் ஆன அடையாளம் தெரியாத ஹைஜேக்கர் டி.பி. கூப்பர். இவர் பணத்தை கொள்ளையடித்த பிறகு சிக்கி கொள்ளாமல் இருக்க பல்வேறு விஷயங்களை செய்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் விஜய், டி.பி. கூப்பர் போன்ற கதாபாத்திரத்தில் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் படத்தில் தோன்றுவார் என தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.