Jyothika Love Story ‘காந்த கண்கள்; எல்லை மீறாத நேர்மை.. வசியம் செய்த சூர்யா.. கழுத்தை நீட்டிய ஜோதிகா! - சூர்யா காதல் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jyothika Love Story ‘காந்த கண்கள்; எல்லை மீறாத நேர்மை.. வசியம் செய்த சூர்யா.. கழுத்தை நீட்டிய ஜோதிகா! - சூர்யா காதல் கதை

Jyothika Love Story ‘காந்த கண்கள்; எல்லை மீறாத நேர்மை.. வசியம் செய்த சூர்யா.. கழுத்தை நீட்டிய ஜோதிகா! - சூர்யா காதல் கதை

Kalyani Pandiyan S HT Tamil
Oct 18, 2023 01:51 PM IST

பிரபல நடிகையான ஜோதிகா கடந்த 2018 ம் ஆண்டு கலாட்டா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி மற்றும் கடந்த 2020 ம் ஆண்டு பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஆகியவற்றின் தொகுப்பே இந்தக்கட்டுரை!

நடிகை ஜோதிகா பேட்டி!
நடிகை ஜோதிகா பேட்டி!

இது குறித்து அவர் பேசும் போது, “நான் எனக்கு சூர்யா தான் வேண்டும் என்று முடிவெடுத்ததற்கான காரணம், அவர் எனக்கு கொடுத்த மரியாதை.  ‘பூவெல்லாம் கேட்டு பார்’ திரைப்படத்தில்தான் நானும் அவரும் முதன்முறையாக ஒன்றாக இணைந்தோம். அவர் என்னிடம் மிகவும் கம்மியாகத்தான் பேசினார். அதுவே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. 

அதனை தொடர்ந்து நாங்கள் கிட்டத்தட்ட ஏழு படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். டைரக்டர் ஒரு சீனில் கதாநாயகியை தொட வேண்டும் என்பது மாதிரியான காட்சிகளை விவரிக்கும் போது, டைரக்டர் எந்த அளவு அந்த சீனில் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ, அந்த அளவில் மட்டுமே சூர்யா செயல்படுவார். அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள மாட்டார். 

இது மட்டுமல்ல, அதை சுற்றி இருக்கக்கூடிய நிறைய விஷயங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மட்டுமல்ல, அவர் பொதுவாகவே பெண்களுக்கு மரியாதை கொடுப்பார். அந்த மரியாதையானது என்னை ஈர்த்துவிட்டது என்று சொல்லலாம்.

இதைத் தவிர்த்து ஒரு ஆண் மகனாக அவரிடம் எனக்கு பல விஷயங்கள் பிடிக்கும். கல்யாணத்திற்கு முன்னதாக நான் மிகவும் தயாராக இருந்தேன். ஷூட்டிங் செல்வதே எனக்கு பிடிக்காமல் ஆகி விட்டது. காரணம் 10 வருடங்களாக 9 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஷூட்டிங்கில் நேரத்தை செலவழித்து விட்டு சென்று, எனக்கு ஒரு வித களைப்பு உருவாகிவிட்டது. நான் அப்போதே எனக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த நிலையில் தான் சூர்யா என்னிடம் வந்து காதலைச் சொன்னார். வீட்டிலும் ஓகே என்று சொன்னார்கள். உடனே அடுத்த மாதமே யோசிக்காமல் கல்யாணம் செய்து கொண்டேன்.

நான் இதை சும்மா சொல்லவில்லை. அவர் ஒரு தந்தையாக மிக மிக நேர்த்தியாக இருக்கிறார். தந்தையாக மட்டும் அல்ல, ஒரு கணவனாகவும் அவர் மிக மிக நேர்த்தியாக இருக்கிறார். சூர்யா எங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து, அருகில் உள்ள கணவன்மார்கள், உங்களைப் பார்த்து எங்களுடைய மனைவிகள் சண்டை இடுவதாக சொல்வார்கள். அவர் இதுவரை எந்த ஒரு நல்ல நாட்களையும் மறந்ததில்லை. எல்லாவற்றையும் அப்படி ஞாபகம் வைத்திருப்பார்.” என்று பேசினார். 

நன்றி: பிஹைண்ட் வுட்ஸ், கலாட்டா

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.