Sai Pallavi: முகப்பருக்களால் தாழ்வு மான்பான்மை இருந்தது – சாய்பல்லவி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: முகப்பருக்களால் தாழ்வு மான்பான்மை இருந்தது – சாய்பல்லவி

Sai Pallavi: முகப்பருக்களால் தாழ்வு மான்பான்மை இருந்தது – சாய்பல்லவி

Priyadarshini R HT Tamil
Published Apr 04, 2023 08:26 AM IST

Actress Interview: பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. நடனத்தில் சிறந்து விளக்குவதுடன், அதிக கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்கமாட்டார். பளிச் புன்னகையுடன் வலம் வரும் நடிகை சாய்பல்லவியின் முகத்தில் பருக்கள் அதிகம் இருக்கும். ஒரு பரு இருந்தாலே நடிகைகள் மேக்கப்போட்டு அவற்றை மறைக்க முயற்சிப்பார்கள், பருக்கள் முகத்தின் அழகையே கெடுப்பதாக பெண்கள் கருதுவார்கள். ஆனால் அந்தப்பருக்களுடனே நடித்து அவையும் அழகுதான் என்று நிரூபித்துள்ள நடிகை சாய்பல்லவி. அந்த முகப்பருக்களே அவரின் அழகை அதிகரித்துக்காட்டும்.  

டைரக்டர்கள் மேக்கப் போடும்படி சொன்னாலும் மறுத்து விடுகிறார். மேக்கப் போடாத காரணங்களை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "எனது முதல் படமான பிரேமம் படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.

பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன்'' என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.