Actress Geetha: ‘என்னைத் தேடி வருவார்கள்..’ நடிகை கீதா ஓப்பன் டாக்!
கமல் சாரின் நடை, உடை, பேச்சு எல்லாமே பாலசந்தர் சார் மாதிரி தான் இருக்கு. பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாலசந்தர் சார் தான் நியாபகம் வருகிறது.
80களில் கவனிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீதா. புதுப்புது அர்த்தங்கள் இவரின் அடையாளம். சமீபத்தில் அம்மா நடிகையாக மாறிய அவர், யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘1978 ல் பைரவி படத்தில் இருந்து ரஜினி சாருடன் நடிக்கத் தொடங்கினேன். அது ஒரு ப்ளாக் அன்ட் ஒயிட் படம். அப்போ நான் ரொம்ப சின்னப் பொண்ணு. அப்போ நான் இருந்த வயதில், இன்று பயங்கரமா பேசுறாங்க. ஆனால், எனக்கு அப்போ எதுவுமே தெரியாது.
நான் வெளியே போனாலே விஜய் அம்மா, ஜெயம் ரவி அம்மானு சொல்றாங்க, அது ரொம்ப பெறுமையா இருக்கு. ஆனால், என் வயதுக்காரர்கள், ‘மேடம்.. புதுப்புது அர்த்தங்கள் எங்களுக்கு எப்போதும் விருப்பமான படம்’ என்கிறார்கள். பாலசந்தர் சாரை ஸ்ட்ரிக்டான டைரக்டர் என்று சொல்ல முடியாது. கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிவிடுவார்.
பாலசந்தர் சாரிடம் முதல் படத்தில் தான் நான் திட்டு வாங்கினேன். அதற்கு பின் கன்னடத்தில் இரு கோடுகள் எடுக்கும் போது, ஜெயந்தி அம்மா ரோலில் நடித்தேன். ஓவர் நைட்டில் அந்த படம் ரிலீஸ் ஆனதும், நான் ஸ்டார் ஆகிவிட்டேன். கன்னட்டத்தில் நான் கமர்ஷியலாக தான் நடித்தேன், எனக்கான வாய்ப்புகளும் அதுவே வந்தது.
இப்போ ரஜினி சார், கமல் சாரை பார்ப்பது, பாலசந்தர் சாரை பார்ப்பது போலவே இருக்கு. கமல் சாரின் நடை, உடை, பேச்சு எல்லாமே பாலசந்தர் சார் மாதிரி தான் இருக்கு. பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாலசந்தர் சார் தான் நியாபகம் வருகிறது. அந்த அளவிற்கு பாலசந்தர் சாரை கமல் உள்வாங்கிவிட்டார்.
மம்முட்டி சாருடன் 16 படங்களில் மலையாளத்தில் நடித்துள்ளேன். பெண் என்கிற சீரியலை சுஹாசினி உடன் பண்ணேன். அப்போது தான் தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை சுஹாசினி பெற்றுத் தந்தார். தளபதி படத்தின் போஸ்டர் வரும் போது, ரஜினி, மம்முட்டி எல்லாரும் இருந்தார்கள். அதை பார்த்ததும், எவ்வளவு நல்ல படம் என நினைத்தேன், ஆனால் அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. அதற்கு காரணம் சுஹாசினி தான்.
விஜய் சாருடன் சிவகாசி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளேன். சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் பேரரசு சார், சிவகாசி படத்தில் நடிக்க அழைத்தார். அதில் பிரகாஷ் ராஜ் சாருக்கும் நான் தான் அம்மா. அதே பிரகாஷ்ராஜ் சாருக்கு சந்தோஷ் சுப்பிரமணியனில் மனைவியாக நடித்தேன். சினிமாவில் இதெல்லாம் சகஜம்.
அஜித் கூட ஆழ்வார் படம் பண்ணிருக்கேன். அதுவும் ரொம்ப எமோஷனல் படம். கன்னடத்தில் என்னை அழுமூஞ்சி கீதா என்று தான் அழைப்பார்கள். அப்படியிருந்த என்னை ஈகோ பெண்ணாக புதுப்புது அர்த்தங்கள் மாற்றியது. இன்று பல குடும்ப பெண்களின் மனநிலையை, நான் அன்றே நடித்துவிட்டேன்.
நான் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை, என்னைப் பற்றி அறிவது கொஞ்சம் சிரமம் தான். நான் வேண்டும் என்றால், என்னைத் தேடி வருவார்கள். நான் வெளிநாட்டில் இருக்கிறேன், இங்கு வரமாட்டேன் என்று நினைக்க கூடாது. என் போன் நம்பர் எல்லாரிடமும் இருக்கிறது. யார் அழைத்தாலும் வந்துவிடுவேன். தனுஷ் சாருடன் ஒரு படம், விஜய் சேதுபதி கூட ஒருபடம் பண்ணனும்,’’
என்று அந்த பேட்டியில் கீதா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்