Gayathri Raghuram: 16 வயதில் என்ட்ரி.. பிரவுதேவா தோளில் என் முழு கால்.. என்னவெல்லாமோ பேசுனாங்க - காயத்ரி பேட்டி!-actress gayathri raghuram latest interview about prabhu deva charlie chaplin movie sexy dance - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gayathri Raghuram: 16 வயதில் என்ட்ரி.. பிரவுதேவா தோளில் என் முழு கால்.. என்னவெல்லாமோ பேசுனாங்க - காயத்ரி பேட்டி!

Gayathri Raghuram: 16 வயதில் என்ட்ரி.. பிரவுதேவா தோளில் என் முழு கால்.. என்னவெல்லாமோ பேசுனாங்க - காயத்ரி பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 10, 2024 06:35 PM IST

Actress Gayathri Raghuram: பிரபுதேவாவுடன் நான் நடிக்கும் போது, எனக்கு எதுவும் தோன்றவில்லை. காரணம் என்னவென்றால், அதில் நடித்த எல்லோரும் எனக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கம் - காயத்ரி பேட்டி!

Gayathri Raghuram: 16 வயதில் என்ட்ரி.. பிரவுதேவா தோளில் என் முழு கால்.. என்னவெல்லாமோ பேசுனாங்க - காயத்ரி பேட்டி!
Gayathri Raghuram: 16 வயதில் என்ட்ரி.. பிரவுதேவா தோளில் என் முழு கால்.. என்னவெல்லாமோ பேசுனாங்க - காயத்ரி பேட்டி!

இது குறித்து அவர் பேசும் போது, நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே என் அப்பாவிடம்  பல தயாரிப்பாளர்கள் முன் வந்து காயத்ரி படத்தில் நடிப்பாளா என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு கேமராவை பார்த்தாலே பயம்.அதனால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அஞ்சலி, கேளடி கண்மணி உள்ளிட்ட படங்களில் கூட என்னைக்கேட்டார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். 

வளர்ந்த பின்னரும் வாய்ப்புகள் வந்தன

நான் வளர்ந்த பின்னரும் வாய்ப்புகள் என்னை நோக்கி வந்து கொண்டு தான் இருந்தன. இதற்கிடையே, மேடை நிகழ்ச்சிகளில் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களோடு நான் நடனம் ஆட ஆரம்பித்தேன். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது, இயக்குநர் பாலா இயக்கி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது என்னால் அதில் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நடிக்கலாம் என்ற முடிவை எடுத்தேன். 

அப்போதுதான் சார்லி சாப்ளின் திரைப்பட வாய்ப்பு எனக்கு வந்தது. பொதுவாகவே எனக்கு காமெடி படங்கள் பிடிக்கும். அந்த படத்தின் கதையும் காமெடி சார்ந்த கதையாக இருந்ததால், யார் நடிக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல், உடனே நான் ஓகே சொல்லி விட்டேன். பிரபுதேவாவுடன் நான் நடிக்கும் போது, எனக்கு எதுவும் தோன்றவில்லை. காரணம் என்னவென்றால், அதில் நடித்த எல்லோரும் எனக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கம். 

ஆண் போலத்தான் இருப்பேன் 

அப்போது நான் கொஞ்சம் ஆண்மகன் போல நடந்து கொள்வேன். பிரபு சார்தான் ஒரு பெண் போல எப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். பிரபுதேவாவுடன் நடிக்கும் பொழுதே மாஸ்டருடன் நடிக்கிறோம் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருக்கும். இன்னொன்று இரண்டு பேருமே பெரிய நடன இயக்குநர்களின் குழந்தைகள். அதனால் நாங்கள் இருவரும் எப்படி நடனமாட போகிறோம் என்பதை மொத்த குழுவும் எதிர்நோக்கி காத்திருக்கும். 

பிரபுதேவா சாரைப் பொறுத்தவரை, அவர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கு அதிகமான ஸ்பேஸ் கொடுத்து, அவர்களை நன்றாக தெரியும்படி நடனத்தை வடிவமைப்பார். அந்த படத்திலும் அப்படித்தான் நடந்தது. அந்த பாடலில் பிரபு தேவாவின் தோள் மீது காலை போட்டு நடனம் ஆடி இருப்பேன்.  அது பேசு பொருளானது. ஆனால், அப்போது நான் மிகவும் சிறு வயது பெண்ணாக இருந்தேன். அதனால் யார் என்ன சொன்னாலும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அந்தப்படத்தின் மூலம் எனக்கு நிறைய ரசிகர்களாவும் மாறியானர்கள். சிலர் என்னை கடுமையாக திட்டவும் செய்தார்கள். ஆனால் எனக்கு அப்போது 16 வயது. அதனால் எதுவும் என் காதில் விழவில்லை” என்று பேசினார். 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.