Dushara Vijayan: துஷாரா விஜயன் மேல் பொறாமைப்பட்ட தனுஷ்.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?-actress dushara vijayan reveals dhanush said that he was jealous of her - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dushara Vijayan: துஷாரா விஜயன் மேல் பொறாமைப்பட்ட தனுஷ்.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?

Dushara Vijayan: துஷாரா விஜயன் மேல் பொறாமைப்பட்ட தனுஷ்.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?

Aarthi Balaji HT Tamil
Oct 01, 2024 08:46 AM IST

Dushara Vijayan: நடிகர்கள் தனுஷ் மற்றும் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பற்றி, துஷாரா விஜயன் சமீபத்தில் மனம் திறந்து பேசினார்.

Dushara Vijayan: துஷாரா விஜயன் மேல் பொறாமை பட்ட தனுஷ்.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?
Dushara Vijayan: துஷாரா விஜயன் மேல் பொறாமை பட்ட தனுஷ்.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?

தனுஷ், ரஜினிகாந்த்

நடிகை துஷாரா கூறுகையில், தனுஷின் 50 வது படமான ராயன் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்காக ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ரஜினி சாருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டீர்களா? என்று தனுஷ் என்னிடம் கேட்டார். நான் அதற்கு ஆம் என்று சொன்னபோது 'பொறாமையாக' இருக்கிறது என்று சொன்னர் தனுஷ்.

பிங்க்வில்லாவிடம்  பேசுகையில், " வேட்டையனும், ராயனும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பது. தனுஷ் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், ஏனென்றால் அவர் எனக்கு பிடித்த ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினீர்களா என்று என்னிடம் கேட்டார். அவர் தலைவரின் மிகப்பெரிய ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நான் ஆமாம் என்றேன், தனுஷ் சார் சொன்னார், உங்கள் மீது எனக்கு முதல் முறையாக பொறாமையாக இருக்கிறது " என்றார்.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 2004 ஆம் ஆண்டு டேட்டிங் செய்த பின்னர் 20 களின் முற்பகுதியில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 18 வருட திருமணத்திற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு பிரிந்தனர். அவர்கள் 2024 ஆம் ஆண்டு பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் இன்னும் ரஜினியுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் துஷாரா நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹம் படத்திற்குப் பிறகு மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் ஆகியோர் இந்த படத்தில் ஒன்றிணைவார்கள்.

வேட்டையனுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ராயன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை' படத்தையும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அவர் விரைவில் சேகர் கம்முலாவின் குபேராவில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் நடிக்கவுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.