Diya Menon: சுவிட்சர்லாந்தில் ஹனிமூன்..குழந்தை பேறில் ஏற்பட்ட பெரும் பிரச்சினை.. துண்டு துண்டாக்கிய அழுத்தம் - தியா!
நாமெல்லாம் நினைத்த உடனேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அங்கு தான் மிகப்பெரிய ஒரு இடி வந்து விழுந்தது. கர்ப்பம் தரித்தலுக்காக சுவிட்சர்லாந்து சென்று ஹனிமூனை கொண்டாடினோம்.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் தியா மேனன். தொடர்ந்து கிரேசி கண்மணி, சூப்பர் சேலஞ்ச், வணக்கம் தமிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இவருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட்டர் கார்த்திக்கிற்கும் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தாங்கள் பெண் குழந்தைக்காக பட்ட பாட்டை அண்மையில் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.
அதில் தியா பேசும் போது, “எனக்கு கல்யாணம் ஆகும் பொழுது 22 23 வயது தான் இருக்கும். ஆகையால், நானும் இவரும் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வதை, இரண்டு மூன்று வருடங்கள் தள்ளி போட்டோம்.
நாமெல்லாம் நினைத்த உடனேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அங்கு தான் மிகப்பெரிய ஒரு இடி வந்து விழுந்தது. கர்ப்பம் தரித்தலுக்காக சுவிட்சர்லாந்து சென்று ஹனிமூனை கொண்டாடினோம்.
ஆனால் இங்கு வந்து டெஸ்ட் செய்தபோது, குழந்தை ஃபார்ம் ஆகவில்லை. இதனையடுத்து நாங்கள் குழந்தைக்காக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தோம். எங்கள் வீட்டாரின் தரப்பிலிருந்து இது குறித்தான கேள்விகள் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும், அவர்களிடம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் இது குறித்தான கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.
அது எனக்கு வருத்தத்தையும் கடுமையான மன அழுத்தத்தையும் கொடுத்தது. அது குறித்தான டென்ஷன் எனக்கு கடைசி வரை இருந்தது. ஒரு கட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்து விட்டு போகட்டும் என்று நினைத்தேன். கர்ப்ப பரிசோதனை செய்து அன்றைய நாள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காத போது அன்றைய தினம் முழுக்க உட்கார்ந்து அழுவேன்.
நான் அப்படி ரிலாக்ஸான தருணத்தில்தான் நான் கர்ப்பம் தரித்தேன். ஒரு நாள் இரவு இரண்டு மணி இருக்கும். சோதனை செய்து பார்த்தேன். ரிசல்ட் பாசிட்டிவாக வந்தது. என் கணவரிடம் சொன்னேன். அவர் கட்டிப்பிடித்து அழுதார்.” என்று பேசினார்
டாபிக்ஸ்