Disco Shanthi: ‘ஜட்டி தான் கொடுப்பாங்க.. ஒரு கூட்டமே பின்னால தட்டுச்சு..’ டிஸ்கோ சாந்தி ‘ஷாக்’ பேட்டி!
Actress Disco Shanthi: என் வாழ்க்கையில் நான் நிறைய பறி கொடுத்துட்டேன். அப்பாவை, சகோதாரனை, குழந்தையை, கணவனை எல்லாரையும் பறிகொடுத்துட்டேன். வாழ்க்கையில் சோகம் மட்டுமே எனக்கு வந்தது.
80களில் கவர்ச்சி கடலாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழியின் ரசிகர்களை நனைய வைத்த டிஸ்கோ சாந்தி, நீண்ட இடைவெளிக்கு பின் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘நடிகர்களில் கமலுக்கு அடுத்து அழகானவர் அர்விந்த் சாமி தான். அதை தவிர வேறு யாரையும் நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். சூர்யாவின் கண்கள் நன்றாக இருக்கும். சூர்யா ஒருமுறை என் கணவரிடம், ‘அக்காவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க’ என்று கூறினாராம்; அன்றிலிருந்து தம்பியாக எடுத்துக் கொண்டேன். அவர், என்னை விட வயதில் குறைந்தவரும் கூட. அதனால் நோ லவ்ஸ், ஒன்லி தம்பி.
கமல் சாருக்கு பிறகு தளபதில் படத்தில் அர்விந்த் சாமியை பார்த்தேன். அவர் அவ்வளவு அழகாக இருந்தார். வயதை பார்த்தால் என்னை விட இரண்டு மூன்று வயது கம்பி. அதனால் ச்சீ… போ என அவரை விட்டு விட்டேன். ஆனால் பாஸ்கர் ஒரு ராஸ்கல், போகன் படத்தை பார்த்தேன், என்னம்மா நடிச்சிருக்கார். தனி ஒருவன் படத்தில் அவர் சுட்டு தற்கொலை செய்த போது , உட்கார்ந்து அழுதேன். என் பசங்க எல்லாம் கிண்டல் பண்ணாங்க. அர்விந்த் சாமி மனைவி தப்பா எடுத்துக்காதீங்க.
என்று மூன்று ஆசை தான் இருப்போதைக்கு இருக்கு. ரஜினி, கமல், அர்விந்த்சாமி உடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும், அவ்வளவு தான். விக்ரம் படத்தை பார்த்து கமல் சார் இந்த வயதில், இப்படி நடிக்கிறாரா என்று அவரை பாராட்ட அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஒரு நபர் என்னை ரொம்ப சங்கடப்படுத்திவிட்டார்.
விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவ்வளவு எளிதில் கோபம் வராது. இப்போது மாதிரி எல்லாம் எங்களை அப்போ பார்க்க மாட்டாங்க. துணி மாற்றக் கூட இடம் இருக்காது. ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு விதமான ஆடை அப்போது இருந்தது. எங்களை மாதிரி கவர்ச்சி நடிகைகளுக்கு ‘டூ பீஸ்’ தான். அதை அப்போ ஜட்டினு தான் சொல்லுவாங்க.
ஜட்டி இல்லை என்றால், சின்னதா ஒரு ஸ்கெட் கொடுப்பாங்க, அவ்வளவு தான் என் ட்ரெஸ். விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றி நிற்கிறார்கள். சிரஞ்சீவி உடன் ஒரு 30 பேர் இருப்பாங்க. ஷூட் முடிந்ததும், அவரை அப்படியே தூக்கிட்டு போயிடுவாங்க. நமக்கெல்லாம் ஆள் இருக்கமாட்டாங்க.
ஷூட் முடிந்து அவர் போயிட்டார். நான் மேலே ஒரு துணியை போர்த்திக் கொண்டு நகர முயற்சிக்கும் போது, ஜனங்கள் எங்களை மொய்த்து விட்டனர் . பின்னால் ஒருவன் வந்து என்னை கிள்ளிவிட்டான். எனக்கு வந்துச்சு பாருங்க கோபம், அவனை கையோடு இழுத்து, கீழே போட்டு நல்லா மிதித்து அடித்து துவைத்துட்டேன்.
சிரஞ்சீவி ஓடி வந்து, என்ன ஆச்சு, ஏன் இப்படி என்று கேட்டார். ‘நீங்க போயிட்டீங்க.. எனக்கு ஏதாவது ஆச்சுனா யார் பார்ப்பா?’ என்று கேட்டேன். அதன் பிறகு, எனக்கும் 10 பேர் பாதுகாப்பு போட்டாங்க.
என் வாழ்க்கையில் நான் நிறைய பறி கொடுத்துட்டேன். அப்பாவை, சகோதாரனை, குழந்தையை, கணவனை எல்லாரையும் பறிகொடுத்துட்டேன். வாழ்க்கையில் சோகம் மட்டுமே எனக்கு வந்தது. டிஸ்கோ சாந்தி என்கிற அடையாளத்தையே நான் தவிர்த்துவிட்டேன். இப்போ யாராவது அந்த பேரை அழைத்தால் கூட நான் திரும்பி பார்ப்பதில்லை,’’
என்று அந்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்