HBD Bhavana: மிஷ்கினின் முதல் ஹீரோயின்.. காரில் நடந்த பாலியல் கொடுமை.. பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த பாவனா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Bhavana: மிஷ்கினின் முதல் ஹீரோயின்.. காரில் நடந்த பாலியல் கொடுமை.. பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த பாவனா

HBD Bhavana: மிஷ்கினின் முதல் ஹீரோயின்.. காரில் நடந்த பாலியல் கொடுமை.. பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த பாவனா

Aarthi V HT Tamil
Jun 06, 2023 07:10 AM IST

நடிகை பாவனா இன்று ( ஜூன் 6) தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாவனா
பாவனா

கார்த்திகா மேனன் என்று இயற்பெயர் கொண்ட இவர் ஜூன் 6 ஆம் தேதி 1986 ஆம் அண்டு பிறந்தார். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது 16 ஆவது வயதில் தனது முதல் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நடிகை அமலாவை பார்த்த பிறகு தானாம். அவரை போன்றே நடித்து அசத்தக்கூடியவர்.

2002 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான நம்மால் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதற்காகத் தான் 12 ஆம் வகுப்பு படித்து வந்ததை நிறுத்திவிட்டார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்தியத் தொழில்களிலும் பணியாற்றியுள்ளார்.

தமிழில் நடித்த படம் 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி. அதைத் தொடர்ந்து வெயில், ஜெயம் கொண்டான், வெயில் படங்களில் நடித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தில், இவர் நடித்த சுசி என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

10 வருட நீண்ட பயணத்தில் 80 படங்கள் வரை நடித்துள்ளார். பாவனா, 2018 ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ரோமியோ படம் மூலம் இருவரும் அறிமுகமாகி, 6 ஆண்டுகள் டேட்டிங் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சில மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது. இவருக்காக தமிழ் சினிமாவின் பலரும் ஆதரவாக நின்றனர்.

பின்னர் அவரை கடத்தியவர்களில் ஒருவர் சிக்கிய நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த தீலிப் தான் கடத்த சொன்னதாகக் கூறினார். இவர் தான் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர். அவர்களுக்கு விவகாரத்து நடந்த பிறகு தீலிப், காவியா மாதவனைத் திருமணம் செய்தார்.

காவியா மாதவன், பாவனா, மஞ்சு வாரியர் மிகவும் நெருக்கமான நண்பர்கள். மஞ்சு வாரியருக்கு தெரியாமல் இவர்களின் காதல் நடந்த நிலையில் அதைப் பாவனா சென்று தோழியிடம் சொல்லி உள்ளார். அதனால் தான் தீலிப் அவரை ப்ளான் செய்து கடத்தி உள்ளார்.

முன்னதாக காரில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய அவர், ”என் கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். இருந்தும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

2020 ஆம் ஆண்டு 15 நாட்கள் நான் நீதிமன்றத்துக்கு சென்றேன். காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்து என் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க 7 வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகள் எல்லாத்திற்கும் பதில் கூறினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது” என என்றார்.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 86 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் பாவனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.