தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Athulya Ravi: அதுல்யா ரவி பாஸ்போர்ட், பணம் திருட்டு - வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது

Athulya Ravi: அதுல்யா ரவி பாஸ்போர்ட், பணம் திருட்டு - வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2024 05:58 PM IST

தமிழ் சினிமா ஹீரோயின் அதுல்யா ரவி வீட்டில் அவரது பாஸ்போர்ட், பணம் திருடுபோயுள்ளது. இதுதொடர்பாக அதுல்யா ரவி வீட்டின் வேலைக்கார பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதுல்யா ரவி பாஸ்போர்ட், பணம் திருட்டு
அதுல்யா ரவி பாஸ்போர்ட், பணம் திருட்டு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருப்பவர் அதுல்யா ரவி. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள், விடியோக்கள் மூலம் தனக்கென பாலோயர்களை வைத்துள்ளார்.

அதுல்யா பாஸ்போர்ட் திருட்டு

கோவையை சேர்ந்த அதுல்யா அங்குள்ள தனது வீட்டில் வசித்துள்ளார். இதையடுத்து அதுல்யாவின் வீட்டில் இருந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் ரூ. 2 ஆயிரம் திருடுபோயுள்ளது.

வீடு முழுக்க பாஸ்போர்ட்டை தேடியும் கிடைக்காத நிலையில், அதுல்யாவின் தாயார் விஜயலட்சுமி கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருவர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்ட விசாரணையில் அதுல்யாவின் வீட்டில் பணிபுரிந்த செல்வி மற்றும் சுபாஷினி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் மற்றம் பாஸ்போர்ட் எடுத்ததை ஒப்புக்கொண்டனர். செல்வியிடமிருந்து ரூ. 1,500 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன் காணாமல் போன பாஸ்போர்ட் குறித்து போலீசார் கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர்.  

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், அதிகமாக எடுத்தால் தெரிந்துவிடும் என்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை எடுத்தாகவும், பாஸ்போர்ட் என்று தெரியாமல் அதை எடுத்துவிட்டதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர். 

பின் பயத்தில் கிழித்துவிட்டோம் என்று அந்த பணிப்பெண்கள் ஒப்புக்கொண்டனர்.

சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் தொடரும் திருட்டு சம்பவங்கள்

அதுல்யாவின் வீட்டில் அவரது பணியாளர் பெண்மணியே திருட்டில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் கோலிவிட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் அவர்களின் பணியாளர்களே திருட்டில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளது. சூப்பர் ஸ்டான் ரஜினிகாந்த மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் அவரது நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக என 60 பவுன் வரை திருடி தனியாக வீடு கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் சமீபத்தில் நடிகை சாயா சிங் வீட்டில் இருந்து 66 கிராம் தங்கம் 150 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், வீட்டில் வேலை செய்த பணி பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதைப் போல் பல்வேறு பிரபலங்களின் வீட்டிலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள், பணியாளர்களால் திருட்டு நடந்துள்ளது.

வளர்ந்து வரும் ஹீரோயின் அதுல்யா

தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. தமிழ் நடிகையான இவர், குடும்பாங்கான தோற்றத்தில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இதையடுத்து கேப்மாரி என்ற படத்தில் கவர்ச்சிகரமான கேரக்டரில் தோன்ற சர்ப்ரைஸ் கொடுத்தார். தொடர்ந்து நாடோடிகள் 2, முருங்கைகாய் சிப்ஸ், வட்டம், காடவர் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் மீட்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். 

தற்போது புதிய படங்கள எதுவும் இல்லாவிட்டாலும், விளம்பரம், மாடலிங் என பிஸியாக இருந்து வரும் அதுல்யா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.