Arthika: கருப்பான பெண்களின் நிலை இது தான் - கார்த்திகை தீபம் சீரியல் நடிகை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arthika: கருப்பான பெண்களின் நிலை இது தான் - கார்த்திகை தீபம் சீரியல் நடிகை

Arthika: கருப்பான பெண்களின் நிலை இது தான் - கார்த்திகை தீபம் சீரியல் நடிகை

Aarthi V HT Tamil
Jan 14, 2023 06:00 AM IST

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்திகா கருப்பான பெண்களின் நிலை குறித்து பேசினார்.

கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல்

அவர் இந்த சீரியலின் மூலமாக கருப்பாக இருக்கும் நபர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு அவமானங்கள் நடக்கிறது என்பதை புரிய வைக்க நடிப்பதாக கூறினார்.

அவர் இந்த சிரீயலில் நடிப்பது குறித்து பேசுகையில், “ நான் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். கார்த்திகை தீபம் சீரியலில் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தவர் சேதுபட நடிகை அபிதாதனாம். அவர் தான் என் புகைப்படங்களை இயக்குநரிடம் காண்பித்தார். கருபாக இருக்கும் பெண்களை பார்த்தாலே அய்யோ பாவம் என்ற பாணியில் பார்க்கின்றனர். அந்த மனநிலையை உடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிரீயலில் நடிக்க ஒப்புக் கொண்டேன். 

நான் நான்கு திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன். அந்த திரைப்படங்களில் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது.

கார்த்திக்குடன் இணைந்து படம் நடித்து இருக்கிறேன். கார்த்திக் உடன் மாதவி என்ற ஷார்ட் ஃப்லிம் மில்

நடித்து இருக்கிறேன். அது இன்னும் வெளியாகவில்லை. அதனால் ஷூட்டில் நன்றாக இருக்கும். எனக்கு கார்த்திகை தீபம் சீரியலில் ஜனனி கதாபாத்திரம் பிடிக்கும்.

முதலில் நான் கேமரா முன் நின்றபோது ஷாட் எடுக்கும் போது எல்லாரும் நம்மலதான் பாப்பார்கள் என டைலாக் பேசும்போது என்ன நினைப்பாங்களோ? என்று கொஞ்சம் பயம் இருந்தது.

இதனால் முதல் ஷாட்டில் எனக்கு டைலாக் எக்ஸ்பிரஷன் எதுவுமே வரல. ஆனால் டீமில் இருந்தவர்கள் ஆதரவாக இருந்த காரணத்தினால் அதன்பிறகு நன்றாக நடித்து முடித்தேன். முதல் படம் அப்படி முந்தாலும் 2-வது படத்தில் தம்பி ராமையா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் எனக்கு சப்போர்ட்டாக இருந்ததால் நன்றாக நடிக்க முடிந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.