Anuja Reddy: ‘அண்ணனோட நண்பர்.. எல்லாம் தெரிஞ்சும் என்ன காதலிச்சார்!- கணவர் குறித்து உருகிய அனுஜா ரெட்டி!
Anuja Reddy: என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் அவர் எப்பொழுதுமே தலையிட்டதே கிடையாது. அதைப்பற்றி எதுவும் கூறவும் மாட்டார். சில நேரங்களில் இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும். - அனுஜா ரெட்டி!

Anuja Reddy: ‘அண்ணனோட நண்பர்.. எல்லாம் தெரிஞ்சும் என்ன காதலிச்சார்!- கணவர் குறித்து உருகிய அனுஜா ரெட்டி! (கலாட்டா )
பிரபல நடிகையான அனுஜா ரெட்டி தன்னுடைய கணவர் குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அண்ணனுடைய நண்பர்
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய கல்யாணத்தை காதல் திருமணம் என்றும் சொல்லலாம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, நடத்தி வைக்கப்பட்ட திருமணம் என்றும் சொல்லலாம். எனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். பெரிய அண்ணனுடைய நண்பராகத்தான் என் கணவர் எனக்கு அறிமுகமானார். அப்போது நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன்.

