ANUJA REDDY : ‘செந்தில் நல்லவர்.. ஆனா கவுண்டமணி அகம்பாவம்.. மூஞ்சிக்கு நேராவே கேட்டேன்’ - அனுஜா ரெட்டி பேட்டி
ANUJA REDDY : அவர் நடிக்கும் படங்களில் இடம்பெற்ற சில பாடல்களில் நான் நடிக்கும் பொழுது கூட, அவர் என்னிடம் பேச்சுவார்த்தை வைக்கவே இல்லை. அதன் பின்னர் வாசு இயக்கிய உடன்பிறப்பே படத்தில் அவருடன் நான் நடித்தேன் - அனுஜா ரெட்டி!

நடிகை அனுஜா ரெட்டி கலாட்டா சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பேசி இருக்கிறார்.
கவர்ச்சியான கதாபாத்திரங்கள்
இது குறித்து அவர் பேசும் போது, “திரைத்துறையில் அறிமுகமான புதிதில், நான் முதலில் கவர்ச்சியான பாடல்களில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ஒரு சிறிய இடைவெளி விட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் கவர்ச்சியான பாடல்களில், கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து, எங்கள் வீட்டில் எதுவுமே கூறவில்லை. காரணம் என்னவென்றால், அவர்களுக்கு போதுமான சினிமா அறிவு என்பது இல்லை. அதனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவே இல்லை.
அம்மா, அப்பா இதுவரை நான் நடித்த படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததே கிடையாது. எப்போதுமே என்னுடைய அக்கா தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். கவுண்டமணி, செந்தில் ஆகிய இரண்டு பேருடனும் நான் நடித்திருக்கிறேன். கவுண்டமணி எல்லோரையும் கிண்டல் செய்வது போல, என்னையும் நிறைய கிண்டல் செய்திருக்கிறார்.
