Actress Anju: ‘குஷ்பு, மீனாவும்தான் குண்டா இருந்தாங்க; அவங்களுக்கு மட்டும் வாய்ப்பை தூக்கி;என்ன எப்படியெல்லாம்’- அஞ்சு!
Actress Anju: பல படங்களில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருந்த என்னை, தங்கை கேரக்டர்களுக்கெல்லாம் நடிக்க கூப்பிட்டார்கள். அது எனக்கு உண்மையில் வருத்தமாக இருந்தது. - நடிகை அஞ்சு!

Actress Anju: பிரபல நடிகையான அஞ்சு, டைகர் பிரபாகரை திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும், தமிழ் சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காத ஆதங்கம் குறித்தும் மிஸ் வாவ் தமிழா சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
17 வயதில் திருமணம்
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “அப்போது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. உண்மையில் சொல்லப்போனால், அது ஒரு குழந்தை திருமணம் தான். காரணம், அப்போது என்னுடைய வயது வெறும் 17. இப்போது கிடைப்பது போல, அப்போது எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்திருந்தால், நான் ஒருவேளை அந்த கல்யாணத்தை செய்து இருக்க மாட்டேனோ என்னவோ?; காரணம் என்னவென்றால், அந்த சமயத்தில் எனக்கு சினிமாவின் மீது பெரிய பிடிப்பு இல்லை. நான் என்னுடைய கேரியரை முடித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
அதற்கு காரணம் இருக்கிறது. பல படங்களில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருந்த என்னை, தங்கை கேரக்டர்களுக்கெல்லாம் நடிக்க கூப்பிட்டார்கள். அது எனக்கு உண்மையில் வருத்தமாக இருந்தது. ஆனால், மலையாளத்தில் எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் என் நடிப்பை மட்டும் தான் பார்த்தார்கள். உடல் அமைப்பை பார்க்கவில்லை. தமிழில் நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்லி என்னை புறக்கணித்தார்கள். ஆனால் மலையாளத்தில் என்னை அப்படி புறக்கணிக்கவில்லை.