Aishwarya Rajesh: ‘ஊசின்னா அம்புட்டு பயம்.. சின்ன வயசுல டாக்டர ஓட விட்ருக்கேன்’ - ஐஸ்வர்யா ராஜேஷ் கலகல!
இப்படிப்பட்ட ஒரு தலைப்பை வெளியே பேசியதற்காக முதலில் வாழ்த்துகள். இந்த காலத்தில் பெண்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதனை வீட்டில் ஓப்பனாக பேசுவதற்கான இடம் உருவாகி இருக்கிறது.
சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், Cosmetic gynaecology (காஸ்மெட்டிக் மகளிர் நல மருத்துவ சிகிச்சை) சிகிச்சைக்கான தொடக்கவிழா நடைபெற்றது. அது தொடர்பான நிகழ்ச்சிக்கு, பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “ இது நமக்கு புதிய டாப்பிக். அழகுசாதன துறையில் உள்ள சிகிச்சைகள் பற்றி நான் நிறைய கேள்விபட்டு இருக்கிறேன்.
இங்குள்ள காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்பவரிடம் பேசினேன். அவர் கூறியதை கேட்கும் போது, இப்படியெல்லாம் இருக்குமா? என்ற கேள்வி எனக்கு வந்தது.
இப்படிப்பட்ட ஒரு தலைப்பை வெளியே பேசியதற்காக முதலில் வாழ்த்துகள். இந்த காலத்தில் பெண்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதனை வீட்டில் ஓப்பனாக பேசுவதற்கான இடம் உருவாகி இருக்கிறது.
முன்பெல்லாம் பெண்கள், அவ்வளவு தயக்கம் காட்டுவார்கள். கூச்சப்படுவார்கள். இப்போது அது மாறியிருக்கிறது. சின்ன வயதில் எனக்கு ஊசி போட்டுக் கொள்வது என்றாலே நான் மிகவும் பயப்படுவேன். எனக்கு காய்ச்சல் வந்தால், ஊசி போட்டுக்கொள்ள சொல்வார்களே என்று சொல்லி, பயங்கரமாக ஓடுவேன். இவ்வளவு ஏன், ஒரு டாக்டரை ஊசி வைத்துக் கொண்டு மருத்துவமனை முழுவதும் ஓட விட்டேன்.” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்