Actress Abhirami: குழந்தையை பெத்துக்குறதா தத்தெடுத்துக்கிறதான்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்’ - அபிராமி விளாசல்
Actress abhirami: அது முழுக்க முழுக்க அந்த பெண்ணின் விருப்பமாகும். என்னுடைய அவள் என்னுடைய அடையாளங்களின் ஒரு பகுதி ஆவாய். முதலில் நான் ஒரு பெண் அடுத்ததாக நண்பர் தாய்மை என எனக்கு பல அடையாளங்கள் இருக்கின்றன - அபிராமி விளாசல்
தமிழில் ‘மிடில் கிளாஸ் மாதவன்’ ‘சமுத்திரம்’ ‘சார்லி சாப்ளின்’ ‘மாறா’ ‘நித்தம் ஒரு வானம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. பல படங்களில் நடித்தாலும் கமலுடன் விருமாண்டி படத்தில் இவர் ஏற்று நடித்த அன்னலட்சுமி கதாபாத்திரம் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது.
இவர் பிரபல எழுத்தாளரான பவணனின் பேரன் ராகுல் பவணனை கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கல்கி என்ற பெண் குழந்தையை இருவரும் தத்தெடுத்துக்கொண்டனர். இது குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவுகளை வெளியிட்டார் அபிராமி.
அபிராமி மகள் கல்கி
இந்த நிலையில் நடிகை அபிராமி தன்னுடைய மகள் கல்கி குறித்து லிட்டல் டாக்ஸ் சேனலுக்கு முன்னதாக பேசி இருந்தார். அதில் அவர் பேசும் போது, “அவள் எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்தது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். ஆனந்தத்தை தரக்கூடிய விஷயம். அவளுடைய பெயர் கல்கி. அவள், அவளுக்கு ஊட்டி விட கூட அனுமதிக்க மாட்டாள்.
அவளுடைய உணவை அவளை சாப்பிட்டுக் கொள்வாள். அவள் இடது கை பழக்கம் உடையவள். அவள் ஒரு இடத்தில் சும்மாவே உட்காரவே மாட்டாள். அவளுக்கு இயற்கை என்றால் அவ்வளவு பிடிக்கும். அவ்வளவு ரசிப்பாள். அவள் எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு, நிறைய பொறுமை எங்களுக்கு வந்திருக்கிறது. சொல்லப்போனால் குழந்தைகளை நாம் பார்க்கும் பொழுது நமக்கு பெரிதாக கோபம் வராது. அவர்களின் அப்பாவி முகத்தால் நமக்கு அது ஏற்படுகிறதா என்பது தெரியவில்லை.
இன்னொன்று நிறைய பொறுப்பு வந்திருக்கிறது
இன்னொன்று நிறைய பொறுப்பு வந்திருக்கிறது; நாங்கள் எது செய்தாலும், அவளை அது பாதிக்கிறதா என்பதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது. தாய்மை என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் அபிப்பிராயம் என்று நான் நினைக்கிறேன். அந்த அபிப்பிராயம் அந்தப் பெண் பத்து மாசம் சுமந்து குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா அல்லது வாடகை தாய் மூலமாக பெற்றுக் கொள்ள விரும்புகிறாரா அல்லது தத்தெடுத்த குழந்தையை வளர்க்க விரும்புகிறார்கள் என்பதை பொறுத்த அமைகிறது
பெண்ணின் விருப்பமாகும்.
அது முழுக்க முழுக்க அந்த பெண்ணின் விருப்பமாகும். என்னுடைய அவள் என்னுடைய அடையாளங்களின் ஒரு பகுதி ஆவாய். முதலில் நான் ஒரு பெண் அடுத்ததாக நண்பர் தாய்மை என எனக்கு பல அடையாளங்கள் இருக்கின்றன அதில் எதை ஒன்றை வெளியே எடுத்தாலும் நான் முழுமையாக உணர மாட்டேன். என்னுடைய அழகான தருணம் என்று நான் சொல்வேன் இது இவ்வளவு அழகாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்