Actor Vishal: 25 வருட கனவு.. சாதித்து காட்ட தயாரான விஷால்.. வெளியான அதிரடி அறிவிப்பு!
Vishal: எல்லாருக்கு வணக்கம். வார்த்தைகள் வரவில்லை. 25 ஆண்டு கனவு நடக்கிறது. இயக்குநராக வேண்டும் என்பது ஆசை என விஷால் கூறினார்.
நடிகர் விஷால் தற்போது புதிய தொடக்கத்தில் நுழைந்து இருக்கிறார். ஆம், நடிகராக இருக்கும் விஷால் தற்போது இயக்குநராக மாறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எனது பயணம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக தொடங்குகிறது. எனது கனவு, எனது லட்சியம், வாழ்க்கையில் நான் என்னவாக வேண்டும் என்ற எனது முதல் எண்ணம் நிறைவேறியது. ஆம், நான் ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன், என் வாழ்க்கையில் மிகவும் சவாலான ஒரு அறிமுக இயக்குனரின் பொறுப்பு.
இங்கே நாம் இறுதியாக செல்கிறோம். எனது முதல் இயக்குனரான துப்பறிவாளன்2. படத்தின் ரெசிக்காக லண்டன், அஜர்பைஜான் மற்றும் மால்டாவுக்குச் செல்கிறேன் .
இந்த தருணத்தை விளக்க வார்த்தைகள் இல்லை, ஆனால் என் அப்பாவை நினைவு கூர்கிறேன் திரு. ஜி.கே. ரெட்டி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார். கடின உழைப்பு எப்போதும் தோல்வியடையாது . எது வந்தாலும் பரவாயில்லை, உங்கள் கனவுகளை விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும் தொடருங்கள், ஒரு நாள் அது நனவாகும். ஒரு நடிகனாக இந்த அடையாளத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. துப்பறிவாளன் 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .
ஒரு இயக்குனராகவும் எனது கனவை முன்னெடுத்துச் சென்ற மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலை வேண்டாம் நிஜ வாழ்க்கையிலோ அல்லது ரீல் வாழ்க்கையிலோ நான் யாருடைய குழந்தையையும் கைவிடுவதில்லை. இலக்கை அடையச் செய்யும் சார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இப்போது வேலைக்குச் செல்கிறேன் “ என்றார்.
எல்லாருக்கு வணக்கம். வார்த்தைகள் வரவில்லை. 25 ஆண்டு கனவு நடக்கிறது. இயக்குநராக வேண்டும் என்பது ஆசை. இதை என் அப்பாவிடம் சொன்னேன்.
அப்பா உடனே உதவி இயக்குநராக, அர்ஜுனிடம் சேர்த்து கொண்டார். அவர் தான் என்னை நடிகராக மாற்றினார். அதற்கு பிறகு நீங்கள் கொடுத்த ஆதரவால் நான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தேன். தொடர்ந்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. துப்பறிவாளன் 2 படத்திற்காக நாங்கள் லண்டன் செல்கிறோம். வேலைகள் தொடங்கியது “ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த விஷயம் பற்றி விஷால் பேசி இருக்கும் வீடியோவில், “ துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க போகிறது. ரொம்ப ஆவலாக இருக்கிறேன். வாழ்க்கையில் லட்சியம் என்பது எல்லாருக்கும் இருக்கும். அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால் எத்தனை வருடம் கடந்தாலும் அது நடக்கும். 25 வருடம் கழித்து நான் இயக்குநராக ஆகப் போவதை உங்களிடம் சொல்ல ஆசைப்பட்டேன்.
உங்களுக்கும் தாமதம் ஆனாலும் அந்த விஷயம் நடக்கும். என் அப்பாவிற்கும், குரு அர்ஜுனுக்கும் மிக்க நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்