Amala paul: ‘டின்னருக்கு நைட்டு ரூமுக்கு வந்துரு அமலா.. கூசாமல் கேட்ட மேனஜர்.. விளக்கமாறில் வெளுத்த அமலாபால்
Amala paul: அமலா பாலிடம் இரவு டின்னருக்கு வந்துவிடு என்று மறைமுகமாக அவரை படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார். இதைக்கேட்டு கொந்தளித்த அமலாபால், அவரை அங்கேயே அடித்து துவைத்து, ஒரு வழி படுத்தி விட்டார்.
Amala paul: அமலா பாலுக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து நடிகர் விஷால் அண்மையில் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “திரைத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறும் குற்றச்சாட்டு தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை அமலா பால் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார்.
படுக்கைக்கு அழைத்தார்
அப்போது அங்கு வந்த அந்த நிகழ்ச்சியின் மேனேஜர், அமலா பாலிடம் இரவு டின்னருக்கு வந்துவிடு என்று மறைமுகமாக அவரை படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார். இதைக்கேட்டு கொந்தளித்த அமலாபால், அவரை அங்கேயே அடித்து துவைத்து, ஒரு வழி படுத்தி விட்டார். இதனையடுத்து, என்னை தொடர்பு கொண்ட அமலாபால், நடந்த சம்பவத்தை விவரித்தார். உடனடியாக நான் கார்த்திக்கிற்கு போன் செய்து, அந்த மேனேஜரை டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்தோம்.
அப்படியான உடனடி நடவடிக்கை தான் இங்கு தேவைப்படுகிறது. முதலில் உங்களிடம் யாராவது அப்படி தவறாக அணுகும் பொழுது செருப்பை கழற்றி அடியுங்கள். தற்போது புதிதாக திரைத்துறைக்கு வரும் பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் உங்களுக்கு என்ன மாதிரியான பாலியல் தொந்தரவு இருந்தாலும் என்னிடம் வந்து முதலில் சொல்லுங்கள். பயப்பட வேண்டாம்” என்று பேசினார்
முன்னதாக ஸ்ரீரெட்டி குறித்து விஷால் பேசியதாவது
அவள் ஒரு பைத்தியக்காரி
இது குறித்து அவர் பேசும் போது, “ மீ டூ இயக்கத்தின் பொழுது என்னுடைய பெயரும், கார்த்தியின் பெயரும் பெரிதாக அடிபடவில்லை. ஆனால், நடிகை ஸ்ரீ ரெட்டிதான் பைத்தியக்காரி போன்று என்னுடைய பெயரை பயன்படுத்தினாள். அதன் பின்னர் அவள் அதற்காக ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் மன்னிப்புக் கேட்டாள். அதன் பின்னர் நடிகர் சங்கம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று புகார் கூறினார்.
எல்லா துறைகளிலும் இருக்கிறது.
மேலும் திரைத்துறையில் கலைஞர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசிய அவர், “ அந்த விஷயத்தில் சில பெண்கள் அப்போது தங்களை படுக்கைக்கு அழைத்தவர்களுடன் இணங்கிச் சென்று விட்டு, பின்னாளில் ஏதாவது ஒரு சம்பவத்தில், அவர்கள் மீது கோபமோ, வெறுப்போ ஏற்படும் போது, அதை பாலியல் குற்றச்சாட்டாக மாற்றுகிறார்கள்.
அது ஒரு தவறான அணுகுமுறை. ஒருவரின் பெயரை நீங்கள் கெடுக்க வேண்டும் என்றால், வெறுமனே நீங்கள் அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்தால் போதும். அது பற்றிக் கொண்டு எரியும். அந்த விவகாரம் என்ன நடந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாகவேச் செல்லும். நாம் ஆம்பளையாக அது குறித்து பேசும் பொழுது, யாரும் நம்மை நம்ப மாட்டார்கள்.
சினிமாவில் நிறைய உப்புமா கம்பெனிகள் இருக்கின்றன. அந்த கம்பெனிகளுக்கு இதுதான் வேலை. அவர்கள் நிச்சயமாக நடிக்க வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள். இது எங்கே முடிவுக்கு வரும் என்றால், நடவடிக்கையை பெண்களாகிய நீங்கள், உடனடியாக தொடங்க வேண்டும்.
நீங்கள் அப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொழுது, ஒரு ஆண் மகனுக்கு உங்கள் மீது பயம் வர ஆரம்பித்து விடும். இல்லையென்றால், நீங்கள் என்னிடம் இப்படி நடந்து கொண்டால் நான் நாளைக்கு திரைத்துறையில் இது குறித்து கூறி விடுவேன் என்று கூறினால் போதும். உங்கள் மீது தானாகவே நெருங்கும் நபருக்கு பயம் வந்துவிடும். இந்த பாலியல் ரீதியான விஷயங்கள் நம்முடைய கோலிவுத்துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே இருக்கிறது. ஆனால் பெண்கள் இதை வெளியே சொல்வதற்கு பயப்படுகிறார்கள். அந்த பயம் நிச்சயமாக இருக்கக்கூடாது.” என்று பேசினார்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்