The Goat: என்ன நண்பா ரெடியா... கோட் படத்திற்காக மாஸான விளம்பரத்தில் இறங்கிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்-actor vijay starrer goat movie promotion on full swing by ags production - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat: என்ன நண்பா ரெடியா... கோட் படத்திற்காக மாஸான விளம்பரத்தில் இறங்கிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்

The Goat: என்ன நண்பா ரெடியா... கோட் படத்திற்காக மாஸான விளம்பரத்தில் இறங்கிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்

Aarthi Balaji HT Tamil
Aug 16, 2024 08:04 PM IST

Goat Trailer:

Goat: என்ன நண்பா ரெடியா... கோட் படத்திற்காக மாஸான விளம்பரத்தில் இறங்கிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்
Goat: என்ன நண்பா ரெடியா... கோட் படத்திற்காக மாஸான விளம்பரத்தில் இறங்கிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்

'கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய் இணைந்து உள்ளார்.

முழு வீச்சில் விளம்பரம்

கோட்' படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் முழு வீச்சில் விளம்பர பணியில் இறங்கி உள்ளது. AGS Cinemaவில் கோட் படத்தின் போஸ்டர்களை பெரிய அளவில் தயார் செய்து வைத்து உள்ளார்கள். அதற்கான வீடியோவையும் வெளியீட்டு உள்ளனர்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியீட இருப்பதாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்து உள்ளது.

படத்தில் நடித்து இருப்பவர்கள்

பிரபல நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ், யுகேந்திரன் வாசுதேவன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பார்வதி நாயர், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்) உள்ளிட்டோர் நடிக்கும் 'கோட்' படத்தில் மோகன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

படப்பிடிப்பு எங்கு நடந்தது

ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு பாடல்கள்

இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டு லைக்குகளையும் இதயங்களையும் இணையத்தில் அள்ளி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்கள் அனைவரையும் இப்பாடல்கள் கவர்ந்துள்ளன. 'கோட்' திரைப்படத்திற்காக முதல் இரண்டு பாடல்களை பாடி உள்ளார் தளபதி விஜய்.

'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

சினிமா தொடர்பான அனைத்து அப்டேட் செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.