விடுதலை 2 குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி! ரசிகர்களுக்கு டபூள் ட்ரீட்!
இயக்குனர் வெற்றிமாரனின் விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் நடிகர் சூரியுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, சேத்தன் மற்றும் ராஜீவ் மேனன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். விடுதலை பாகம் 1 படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தி இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதி குறித்து நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டரில் பதிவை வெளியீட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா
இளையராஜா இசையமைத்து வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் சமீபகாலமாக இன்றைய கால ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறார். பல ஆண்டுகளாக இளையாராஜாவிற்கு என்ற தனி இடத்தை இன்றும் தமிழ் சினிமாவில் தக்க வைத்து வருகிறார். பல புதிய இசையமைப்பாளர்கள் வந்த போதிலும் இளையாராஜவின் மவுசு இன்றும் குறையவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 17 அன்று இப்படத்தில் இருந்து ’தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை அவருடன் இணைந்து அனன்யா பட் பாடியுள்ளார். வழிநெடுக காட்டுமல்லி பாடலை போலவே இந்த பாடலும் கேட்டவுடன் பிடித்துவிடும் வகையில் இசை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.