ரஜினியை இயக்க இருந்த இளையராஜா! இறுதியில் வந்த சுந்தர்ராஜன்! சுவாரசிய தகவல்!
இசை உலகின் ராஜாதி ராஜாவாக இருந்து வரும் இசைஞானி இளையராஜா இசைத்துறையில் யாராலும் எட்ட முடியாத சாதனைகளை புரிந்துள்ளார். இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான இளையராஜா ஒரு இசையமைப்பாளர் மட்டுமாக இருந்தது இல்லை.
இசை உலகின் ராஜாதி ராஜாவாக இருந்து வரும் இசைஞானி இளையராஜா இசைத்துறையில் யாராலும் எட்ட முடியாத சாதனைகளை புரிந்துள்ளார். இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான இளையராஜா ஒரு இசையமைப்பாளர் மட்டுமாக இருந்தது இல்லை. பல பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் சிறந்த கவிதைகளையும் எழுதி பெயர் பெற்றவராவார். இந்நிலையில் இளையராஜா குறித்த ஒரு சுவாரசிய தகவல் உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க இருந்த படத்தை இயக்க இருந்துள்ளார்.
இளையராஜா
தமிழ் சினிமாவில் அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமாகி இன்று வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை இசையமைத்துள்ளார். இளையராஜா இசை என்றாலே இளையராஜாவை தவிர வேறு எந்த பெயரும் நமது ஞாபகத்தில் வருவதில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு இசையோடு இளையராஜா இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் இளையராஜாவின் சாதனைகள் பல உள்ளன. அதில் அன்னக்கிளி படத்தில் தொடங்கி தற்கால புது இயக்குனர்களின் படங்கள் வரை காலத்திற்கு ஏற்றவாறு புதுவிதமான இசைகளை இளையராஜாவால் மட்டுமே தர முடிகின்றது. இளையராஜா எழுதி வெளியான பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. அதிலும் குறிப்பாக இவரது சகோதரர் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஆரம்ப பாடலான பாட்டாலே புத்தி சொன்னார் என்ற பாடலை இளையராஜாவை எழுதியிருப்பார். அதில் உள்ள அத்தனை வரிகளும் வசிக்கும் படியாக இருக்கும்.
ரஜினிக்காக இயக்குனர் அவதாரம்
ரஜினி இருவேடங்களில் நடித்து கடந்த 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குநர் சுந்தர்ராஜன் இயக்கி இருப்பார். இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருப்பார். மேலும் ஒரு ரஜினிக்கு நதியா மற்றும் மற்றொரு ரஜினுக்கு ராதா ஜோடியாக நடித்து இருப்பர். இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரின் தயாரிப்பு நிறுவனமான பாவலர் கிரியேஷன் மூலம் தயாரித்து இருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் போது கௌதம் மேனனிற்கு அளித்த பேட்டியில் ராஜாதி ராஜா படம் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் இளையராஜா, “ஒருமுறை ரஜினிகாந்த் என்னிடம் வந்து இளையராஜாவின் சகோதரர் பாஸ்கருக்கு ஒரு படம் பண்ணி தரேன் சாமி என்று கூறினார். இந்த படத்தை நீங்கள் இயக்க வேண்டும். அதனால் இந்த படத்துக்கு ஒரு பெயர் வையுங்கள் என்று சொன்னார். அப்போது நான் ராஜாதி ராஜா என்று சொன்னேன்” எனக் கூறினார்.
மேலும் உடனே அவர் ஏன் ராஜாதி ராஜா என்றார். அதற்கு நான், 'நான் ராஜா. என்னைவிட பெரிய ஆள் நீங்கள். எனவேதான் ராஜாதி ராஜா' என்று கூறினேன். அவர் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி அவர் என்னிடம், இது நல்லாருக்கும் சாமி. ராமனாகிய நீங்கள் படத்தை இயக்க; ராவணனாகிய நான் நடிக்க சூப்பரா இருக்கும் என்று சொன்னார். இந்த தகவலை பகிர்ந்து கொண்டிருந்தார். இசை உலகில் எண்ணிலடங்கா படைப்புகளை கொடுத்துள்ள இளையராஜாவின் இந்த இயக்குனர் அவதாரம் இறுதியில் மாறியது. இறுதியாக இயக்குனர் சுந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கினார். மேலும் இப்படத்திற்கு பஞ்சு அருணாச்சலம் கதை எழுதியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்