Thalapathy vijay fined: காரில் கருப்பு ஸ்டிக்கர்…விஜய்க்கு அபராதம்
காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக நடிகர் விஜய்க்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து நிகழ்ச்சிக்காக வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரில் கருப்பு கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விஜய்க்கு அபராதம்
தளபதி விஜய் நடித்துள்ள புதிய படமான வாரிசு பொங்கல் ரிலீசாக திரைக்கு வரவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையே சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் வைத்து அதன் நிர்வாகிகளை சந்தித்தார நடிகர் விஜய். இந்த சந்திப்புக்கு முன்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் சென்றபோது, அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாகக் கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். கார்களில் கருப்பி நிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.