HBD Vijay: தமிழ் சினிமா வசூல் நாயகன்.. இளைஞர்களின் தளபதி.. அரசியல் கட்சி.. நடிகர் விஜய் பிறந்தநாள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vijay: தமிழ் சினிமா வசூல் நாயகன்.. இளைஞர்களின் தளபதி.. அரசியல் கட்சி.. நடிகர் விஜய் பிறந்தநாள்

HBD Vijay: தமிழ் சினிமா வசூல் நாயகன்.. இளைஞர்களின் தளபதி.. அரசியல் கட்சி.. நடிகர் விஜய் பிறந்தநாள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 05:45 AM IST

Actor Vijay: நடிகர் விஜய் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது.

தமிழ் சினிமா வசூல் நாயகன்.. இளைஞர்களின் தளபதி.. அரசியல் கட்சி.. நடிகர் விஜய் பிறந்தநாள்
தமிழ் சினிமா வசூல் நாயகன்.. இளைஞர்களின் தளபதி.. அரசியல் கட்சி.. நடிகர் விஜய் பிறந்தநாள்

பொதுவாக கோலிவுட்டில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், என்ற வரிசையில் அஜித்துடன் விஜய்யை பொறுத்தியது சினிமா உலகம். அன்று தொடங்கி தற்போது வரை தன்னை உச்சபட்ச நட்சத்திரம் என்று அடையாளப்படுத்த தொடர்ச்சியாக உழைத்து வரும் விஜய்யின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு புரட்டி பார்க்கலாம்

பிறப்பு

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.

திருமணம்

விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பத்தில் துறு துறுவென இருந்த விஜய் தனது சகோதரி மறைவையடுத்து மிகவும் அமைதியாகி விட்டதாக அவரது தாய் ஷோபா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

திரைத்துறை

விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 

இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.

90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .

இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

கடைசியாக அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி என்று நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகு நான் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என இலை மறையாக தனது அறிக்கையில் விஜய் கூறி இருப்பது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.