Kadhal Sukumar: ஒரே மாதிரியாக நடித்ததால் வந்த வினை.. ஆளை வைத்து அடித்து அசிங்கப்படுத்திய வடிவேலு! -காதல் சுகுமார் வேதனை!
காதல் சுகுமாரை வடிவேலு தாக்கிய சம்பவம் குறித்து அவரே கொடுத்த பேட்டி இங்கே!

“அப்போது கலகலப்பு என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க நான் கமிட் ஆகி இருந்தேன். அந்த திரைப்படத்தில் என்னை வடிவேலு போல அவர்கள் நடிக்கச் சொன்னார்கள். அதற்கு எதற்கு சார் நான் அவரை போல நடிக்க வேண்டும்.. அதற்குதான் அவர் இருக்கிறாரே.. என்றேன்.
அதன் பின்னர் சரி நடிக்கலாம் என்று சொல்லி நானும் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து அந்த காட்சியில் நடித்தோம். கிட்டத்தட்ட அப்படியே வடிவேலு மாதிரியே நடித்தேன். இந்த நிலையில்தான் வடிவேலுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி முத்துக்காளையும் போண்டாமணியும் நான் அவரைச் சென்று பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
உடனே நான் குருவே பார்க்கப்போகிறோம் என்று பூரிப்பில் பூங்கொத்து எல்லாம் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அவரை மருத்துவமனையில் பார்த்துவிட்டு பூங்கொத்து கொடுத்து வணக்கம் என்று சொல்லி பேசினேன். குருவே இல்லாமல் வித்தை கற்றுக் கொண்டேன் என்று நான அவரிடம் சொல்ல அவரும் என்னுடைய ஆத்தாவும் என் வயிற்றில் பிறந்தது போல நீ இருக்கிறாய் என்று சொல்வதாகச் சொன்னார்.
