Kanguva Trailer: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. நடிப்பு வெறியாட்டம்.. வெளியானது சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர்!-actor surya siruthai siva kanguva disha pathani movie trailer out - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanguva Trailer: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. நடிப்பு வெறியாட்டம்.. வெளியானது சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர்!

Kanguva Trailer: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. நடிப்பு வெறியாட்டம்.. வெளியானது சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 12, 2024 02:17 PM IST

Kanguva Trailer: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி விட்டது. இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார்.

Kanguva Trailer: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. வெளியானது சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர்!
Kanguva Trailer: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. வெளியானது சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர்!

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தில் வெளியான போஸ்டர்கள், பாடல், டீசர் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இந்த கதையை நம்பி.. 

இந்தப்படம் குறித்து முன்னதாக பேட்டியளித்த சிறுத்தை சிவா, “சூர்யா சாருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர்; ஒரு சிறந்த மனிதர்; அவருடன் வேலை பார்த்தது வசதியாக இருக்கிறது. அவர் எங்களின் வேலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்த குழுவும் இந்த வாய்ப்பை எப்படியான ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இந்த கதையை நம்பி என்னுடைய விஷனை பெரிய திரையில் கொண்டு வர விரும்பி இருக்கிறார்கள்.” என்றார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கும் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். மேலும் அவர் தனக்கு இது தனித்துவமான அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். போஸ்டரில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கழுகு, டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வந்த நாய் மற்றும் குதிரை ஆகியவற்றுக்கு படத்தின் கதையில் சம்பந்தம் இருக்கிறது” என்றார்.

10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

மேலும் பேசிய அவர், “கங்குவான் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

இதில் பீரியாடிக் சம்பந்தப்பட்ட காலமும், சமகாலம் என இரண்டும் கலந்து இருக்கும். நாங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்க விரும்புகிறோம். ஒரு கம்பீரமான மற்றும் மறக்கமுடியாத திரைப்படம் கொடுக்கும் அனுபவம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.” என்று பேசினார்.

இந்தப்படத்தை பார்த்த பாடலாசிரியர் விவேகா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கங்குவா படம் குறித்து எழுதியிருந்தார்.

கங்குவா படத்தின் முதல் விமர்சனம்

அதில் பதிவிட்டு இருந்த அவர், " கங்குவா' படம் பார்த்து மெய் சிலிர்த்து போனேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...இந்த படத்தில் பங்கு கொண்டு பணியாற்றியதற்கு நான் பெருமை படுகிறேன். " என்று பதிவிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.