Nandha Movie: பட்டைத்தீட்டிய பாலா.. ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டிய சூர்யா.. 22 -வது வருடத்திலும் வைரமாக ஜொலிக்கும் நந்தா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nandha Movie: பட்டைத்தீட்டிய பாலா.. ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டிய சூர்யா.. 22 -வது வருடத்திலும் வைரமாக ஜொலிக்கும் நந்தா!

Nandha Movie: பட்டைத்தீட்டிய பாலா.. ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டிய சூர்யா.. 22 -வது வருடத்திலும் வைரமாக ஜொலிக்கும் நந்தா!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 14, 2023 06:50 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படம் 22 வது வருடத்தில் நுழைகிறது.

நந்தா திரைப்படம்!
நந்தா திரைப்படம்!

குடித்து விட்டு அம்மாவை அடிக்கும் அப்பாவை கட்டையால் ஒரே போடாக போட்டு தள்ளும் நந்தா, சீர்த்திருத்த பள்ளிக்குள் அடைபடுகிறான். அம்மாவின் முந்தானை பிடித்தே வளர்த்த அந்த பிஞ்சு நெஞ்சிற்கு, சிறையின் நான்கு சுவர்களும் தனிமை தீயை கொடுக்கின்றன. 

மகனின் வன்முறையை கண்டு அஞ்சும் அம்மாவும், அவனை ஒதுக்குகிறாள். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த வெறுமையும் அவனை ஆட்கொள்ள,  வாழ்க்கையின் பெருங்கோபம் கொண்டு காலத்தை கடத்துகிறான் நந்தா. 

சிறைச்சாலையில் இருந்து பல வருடங்களுக்கு பிறகு வெளியே வரும் நந்தா தன்னுடைய குடும்பத்தை பார்க்க வருகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த அன்பு அங்கு  கிடைக்கவில்லை. கத்துகிறான், கதறுகிறான்.. 

ஆனால் முகம் தயவை எதிர்பார்த்தாலும், அவனின் இரக்கமில்லாத கண்கள் குடும்பத்தை பயமுறுத்துகின்றன. இந்த நேரத்தில்தான் ஊரில் பெரியவரின் அடைக்கலம் நந்தாவிற்கு கிடைக்க, அவரின் அபரிவிதமான அன்பில் நெகிழ்ந்து, அவரிடம் அடைக்கலம் ஆகிறான். இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாய் வந்து சேரும் கல்யாணிக்கு நந்தாவின் மீது காதல் ஏற்படுகிறது. வாழ்க்கை வெளிச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில், சில சூழ்ச்சிகளால் பெரியவர் கொலை செய்யப்படுகிறார். அதன் பின்னர் என்ன ஆனது, அம்மாவின் அன்பிற்காக ஏங்கிய நந்தாவின் நிலைமை என்ன ஆனது, என்பது மீதிக்கதை

நந்தாவின் நடை, உடை, பாவனை என அனைத்தையும் மொத்தமாக மாற்றி பட்டைத்தீட்டினார் இயக்குநர் பாலா. இந்த கேரக்டருக்காக , இராமேஸ்வரம் வெயிலில் படுத்து கறுத்த சூர்யா, வாய் கருப்பிற்காக சிகரெட்டும் பிடித்தார். இந்தப்படத்தில் அவரின் பெரும்பான்மையான எமோஷன் அனைத்தும் கண்கள் வழியாகத்தான் வெளிப்படும். அதனை அத்தனை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருப்பார் பாலா. 

குறிப்பாக இந்தப்படத்தில் இடம் பெற்ற கல்லூரி ஃபைட் ஒன்றில், சீறும் பாம்பை ரெபெரென்ஸ் வைத்துதான் சூர்யாவின் கழுத்தை சுற்ற வைத்திருப்பார் பாலா. அதனை படத்தின் பல்வேறு இடங்களில் செய்திருப்பார் நடிகர் சூர்யா. அதற்கு பின்னால் வரும் கழுகின் பின்னணி குரல்.. நம்மை ஏதோ செய்யும். 

பெரியவராக நடித்த நடித்த ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜியைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் பாலா. ஆனால் சில காரணங்களால் அது நடக்கமால் போக, ராஜ்கிரணுக்கு அந்த கதாபாத்திரம் சென்றது. அமைதியின் சொரூபமாக, ஆக்ரோஷத்தின் அடையாளமாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு அக்மார்க் தரத்தை சேர்ந்தது. 

லைலாவின் வெகுளியான காதல் படத்தின் பேரழகு. குறிப்பாக லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் காமெடி சேனல்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. முன்பனியா, ஓராயிரம் என மெட்டு போட்டு வியக்க வைத்த யுவன், பின்னணி இடையிலும் தன்னுடைய பங்கை செவ்வனே செய்திருந்தார். 

பாலாவின் படங்கள் சோக மயமாக முடியும் என்பது தெரிந்தாலும், நந்தா படத்தின் கிளைமேக்ஸ் விமர்சனங்களை பெற்றது. அதற்கு காரணம், அதில் ட்ராமை தன்மை குறைவாக இருந்தது. அதை பாலாவே பேட்டியில் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.