Actor Suriya: மறைந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன நடிகர் சூர்யா
மறைந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார், நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் பிதாமகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து உச்ச நடிகராக பலரது மனதை வென்றிருப்பவர், நடிகர் சூர்யா.
இவர் சினிமா மட்டுமல்லாது, அகரம் என்னும் அமைப்பினைத் தொடங்கி, மாணவ - மாணவிகள் படிக்கப் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இந்த அகரம் அமைப்பிற்கு, நடிகர் சூர்யாவின் தலைமையில் பல்வேறு நபர்கள் உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தியும் உழவன் ஃபவுண்டேசன் என்னும் அமைப்பினைத் தொடங்கி, விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தைச் சார்ந்த 24 வயதான அரவிந்த் என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
நடிகர் சூர்யா இந்தத் தகவல் கேள்விப்பட்டு, எண்ணூரில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது தெலுங்கு ரசிகர் அகால மரணம் அடைந்த நிலையில், கங்குவா படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வீடியோ கால் செய்து, அவரது ரசிகரின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்