தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Suriya Helped By Paying College Fees For Assistant Director Son

மகன் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்த இணை இயக்குநர்.. உதவி செய்த சூர்யா

Aarthi V HT Tamil
Jan 03, 2024 12:51 PM IST

சூர்யா தன்னுடைய இக்கட்டான சூழலில் எப்படி உதவி செய்தார் என்பது பற்றி இணை இயக்குநர் மணி பாரதி பேசினார்.

சூர்யா
சூர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக மக்கள் எந்த ஒரு நெருக்கடியை சந்தித்தாலும் முதலில் உதவி செய்வது சூர்யா தான். சூர்யா மக்களை மட்டுமின்றி தனது படத்தில் நடித்தவர்களுக்கும், வேலை செய்வதவர்களுக்கு உதவி செய்வதை அடிக்கடி செய்த வண்ணம் உள்ளார். தனக்கு நிதியுதவி செய்த சூர்யா பற்றி இயக்குநர் மணி பாரதி பேசி உள்ளார்.

பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட சில சூர்யா படங்களில் இணை இயக்குநராக இருந்தவர் மணி பாரதி. அன்றைய நட்பு இப்போதும் இருக்கிறது.

சூர்யா அவரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததாகவும் இயக்குநர் நினைவு கூர்ந்தார். யூடியூப் சேனல் ஒன்றில் வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், " ஐந்து ஆண்டுகளுக்கு முன், என் மகன் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கடந்த ஆண்டில் என்னால் கட்டணம் செலுத்த முடியவில்லை. 1 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும். யாரிடம் கேட்பது என்று யோசித்தேன். சூர்யாவை நெருங்குவது நினைவுக்கு வந்தது.

அதுவரை நான் சூர்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. கடைசியாக மேலாளரிடம் சொன்னேன். செய்தி அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் அழைத்தார். கல்லூரி தகவல்களை அனுப்பச் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து சூர்யாவின் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. டிடி தயார், வந்து வாங்கி கொள்ளுங்கள் என பதில் வந்தது.

அப்போது சூர்யா மும்பையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் கேட்டதை மறக்காமல் அவரே வந்து உதவி செய்தார். கட்டணம் செலுத்திய பிறகு சூர்யா ஒரு செய்தியை அனுப்பினார். எனக்கு அது வியப்பை ஏற்படுத்தியது " என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.