Actor Sudhakar: உடல்நிலை குறித்து வதந்தி..முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சுதாகர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Sudhakar: உடல்நிலை குறித்து வதந்தி..முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சுதாகர்!

Actor Sudhakar: உடல்நிலை குறித்து வதந்தி..முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சுதாகர்!

Karthikeyan S HT Tamil
May 27, 2023 10:23 AM IST

Actor Sudhakar Health: தனது உடல் நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், நடிகர் சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சுதாகர்.
நடிகர் சுதாகர்.

சுருட்டை முடி , களையான முகம், வித்தியாசமான தலை வகிடு, சின்ன மூக்கு, வசீகரமான தோற்றம் என மனதை கவர்ந்த சுதாகருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சினிமாவில் நல்ல உச்சத்தில் இருந்த சுதாகர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

1980ஸ் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதாகர், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சுதாகர் உடல்நிலை குறித்து தெலுங்கு இணையதளங்களில் திடீர் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பார்த்து திரையுலகினர் பலரும் சுதாகர் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர்.

இதையடுத்து உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தயவு செய்து பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். எதையும் உண்மை தெரியாமல் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதாகர் தற்போது தெலுங்கு படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.