SJSurya interview: என்ன கோமாளின்னு சொல்லி..கீழே புரண்டு அழுதேன்! - SJ சூர்யா வேதனை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sjsurya Interview: என்ன கோமாளின்னு சொல்லி..கீழே புரண்டு அழுதேன்! - Sj சூர்யா வேதனை!

SJSurya interview: என்ன கோமாளின்னு சொல்லி..கீழே புரண்டு அழுதேன்! - SJ சூர்யா வேதனை!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 05, 2023 06:00 AM IST

நடிகர் அமிதாப்பச்சனோடு நடித்து நின்ற திரைப்படம், தன்னை கோமாளி என்று விமர்சித்தது உள்ளிட்ட பல சம்பவங்கள் பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்து இருக்கிறார்

sj surya interview
sj surya interview

கனியை சுவைத்து சாப்பிட்டு முழுங்குவதற்கு முன்னால் அந்த படம் நின்று போய்விட்டது. அந்த படத்தில் ஒரு தமிழன் இந்தியா முழுவதும் சென்று தன்னை நிரூபித்தான் என்பதுதான் என்னுடைய டார்கெட்டாக இருந்தது. அதற்காக நான் ஐந்து வருடங்கள் போராடி இருக்கிறேன். அதற்காக ஒரு படத்தை செட் செய்து அதில் அமிதாப்பச்சன் சாரை உள்ளே கொண்டு வந்து பத்து நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ஆனால் அந்த படம் நின்றுவிட்டது. அப்போது போது சிறு பிள்ளைகள் தரையில் கீழே புரண்டு அழுவார்கள் தெரியுமா?. அதே போல நான் அழுதேன். என்னால் அதனை தாங்கவே முடியவில்லை.

எஸ்.ஜே.சூர்யாவுடன் அமிதாப்பச்சன்!
எஸ்.ஜே.சூர்யாவுடன் அமிதாப்பச்சன்!

உழைக்கத்தானே செய்தோம் நமக்கு ஏன் இவ்வளவு பெரிய வலியை ஆண்டவன் கொடுக்கிறான் என்று சொல்லி நான் உடைந்து போனேன். ஆனால் ஆண்டவன் அதன்பிறகு ஒரு கதவைத் திறந்து நல்ல நல்ல படங்களை எனக்கு கொடுத்தான். என்னை இயக்குநர் தொழிலில் ஆண்டவன் உச்சத்தில் தூக்கி வைத்தான்.

ஆனால் எனக்கு நடிகர் தொழிலில் உச்சம் தொட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. அதற்காக கீழே விழுந்து, அடிபட்டு ரத்தம் வந்து, மீண்டும் கட்டுப்போட்டுக் கொண்டு எழுந்து இப்போது ஓடிக் கொண்டிருக்கிறேன். நியூ மற்றும் அன்பே ஆருயிரே; அந்த இரண்டு படங்கள் தான் நான் நடிகனாக என்னை நிலை நிறுத்திக் கொண்டது. அந்த படங்களில் என்னை நான் இயக்கிக் கொண்டே நடித்தேன்.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

அந்த படங்கள் ரசிகர்களிடம் 100% ரீச் ஆகிவிட்டது. ஆனால் திரைத்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் இவன் ஏன் நடிக்கிறான்... கோமாளித்தனமாக நடித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள். நான் பிற இயக்குநர்களிடம் செல்லும் பொழுது நான் பண்பட்ட நடிகனாக இல்லை என்பது புரிந்தது. அப்போதுதான் பயிற்சியாளராக இருப்பது வேறு; விளையாட்டு வீரராக இருப்பது வேறு என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். சரி அப்படியானால் ஒரு நல்ல விளையாட்டு வீரராக ஆக வேண்டும் என்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ‘இசை’ படத்தில் நடித்தேன் அதன் பின்னர் ‘இறைவி’ அப்படியே அடுத்தடுத்த படங்கள் வந்து தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.” என்று அவர் அதில் பேசினார்.

நன்றி: குமுதம்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.