Maaveeran : மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!
மாவீரன் திரைப்படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார்.
தமிழ் திரைத்துறையில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடித்திருக்கும் படம் மாவீரன்.‘மண்டேலா’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது. மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி மாவீரன் படம் ஜுலை 14 ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தெலுங்கில் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ‘போலா ஷங்கர்’ படமும் வருகிறது. சந்தீப் ரெட்டி வாங்காவின் 'அனிமல்' சுதந்திர தின வாரத்தில் இந்திய சந்தையிலும் கவனம் செலுத்துகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாக்ஸ் ஆபிஸ் பாதிக்கும் என்பதால் மாவீரன் படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளதால் ஜூலை 14 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்