Singamuthu: ‘உதவிய ஒருத்தர் கூட உதவல’ சிவகங்கை டூ சிங்காரச் சென்னை பற்றி சிங்கமுத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singamuthu: ‘உதவிய ஒருத்தர் கூட உதவல’ சிவகங்கை டூ சிங்காரச் சென்னை பற்றி சிங்கமுத்து!

Singamuthu: ‘உதவிய ஒருத்தர் கூட உதவல’ சிவகங்கை டூ சிங்காரச் சென்னை பற்றி சிங்கமுத்து!

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 19, 2023 05:30 AM IST

‘அரிசி மண்டியில் சினிமாக்காரர்கள் பழக்கம் கிடைத்தது. சுந்தரம் காபியில் வேலை பார்த்த அனுபவத்தில், ஒரு டீக்கடை போட்டேன். சில இயக்குனர்களுக்கு நிறைய உதவி பண்ணிருக்கேன். அவர்கள் எனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறுவார்கள்’

நடிகர் சிங்கமுத்து  -கோப்புபடம்
நடிகர் சிங்கமுத்து -கோப்புபடம்

‘‘நான் ஒரு விவசாய குடும்பம். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பக்கத்துல ஊர். விவசாயம் பண்ணா தான் சாப்பாடு. விளையும் நெல் கொஞ்சம் வித்தால் தான், எங்களுக்கு செலவு பண்ண முடியும். பர்மாவில் இருந்து எங்க அப்பா காலத்தை வீணடித்துவிட்டார். விவசாயத்தை தவிர வேறு வருமானம் எங்கள் வீட்டில் இல்லை. பூர்வீக நிலம் இருந்ததால் தப்பித்தோம். 

நான் பியூசி படிக்கும் போது குடும்பம் வறுமையில் திணறுது. யாராவது ஒரு ஆளாவது தலையெடுக்க வேண்டிய கட்டாயம். அங்குள்ள கல்லூரி நிர்வாகத்தின் 12 பேருந்துகளுக்கு செக்இன்ஸ்பெக்டரா போட்டாங்க. அப்புறம் கன்டக்டரா போவேன். திடீர்னு பெட்ரோல் பங்க்ல இருப்பேன். எல்லா வேலையும் பார்த்தேன். 

இப்படியே இருக்கமே, மாறணுமே என தோன்றியது, அங்கே சொல்லிவிட்டு திருச்சி வந்துட்டேன். காந்தி மார்க்கெட் ரைஸ் மில்லில் பணிக்கு சேர்ந்தேன். 6 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தேன். அதுக்கு அப்புறம், இன்னொரு இடத்திற்கு நகரலாம் என்று தோன்றியது. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. முதலாளியிடம் ரூ.200 வாங்கிக் கொண்டு, மனைவியை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு புறப்பட்டேன். 

சுந்தரம் காபியில் 2 ஆண்டு வேலை பார்த்தேன். அங்கு 4 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர்., நகரில் வாடகை விளம்பரம் பார்த்து, அதை வாடகைக்கு கேட்டேன். 2 ஆயிரம் அட்வான்ஸ் கேட்டாங்க. அதில் 2 ஆயிரம் போச்சு. மிதமுள்ள 2 ஆயிரம் ரூபாயில் அரிசி கடை ஆரம்பித்தேன். 

பழக்கத்தில் ஒருவர் 150 மூடை அரிசி கொடுத்தார். வித்துட்டு பணம் கட்ட சொன்னார். பார்த்தால் திடீர்னு முதலாளி ஆகிட்டேன். எல்லாரையும் சென்னைக்கு வரச் சொல்லிட்டேன். வந்து அக்கா, தங்கச்சி எல்லாரையும் கட்டிக் கொடுத்தேன். அப்புறம் குடும்பத்தில் சில மனஸ்தாபங்கள், அம்மா, அப்பா எல்லாரையும் ஊருக்கு அனுப்பிட்டேன். 

அரிசி மண்டியில் சினிமாக்காரர்கள் பழக்கம் கிடைத்தது. சுந்தரம் காபியில் வேலை பார்த்த அனுபவத்தில், ஒரு டீக்கடை போட்டேன். சில இயக்குனர்களுக்கு நிறைய உதவி பண்ணிருக்கேன். அவர்கள் எனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறுவார்கள். இயக்குனர் சங்கர் என்னோட கடையில் தான் டீ சாப்பிடுவார். வைராக்கியமான மனிதர், காசெல்லாம் கேட்கமாட்டார். நான் கொஞ்சம் ஜாதகம் பார்ப்பேன். அவருக்கு ஜாதம்பார்த்து அப்பவே சொன்னேன், ‘நீங்க பெரிய ஆளா போறீங்க’ என்றேன். அவர் நம்பவில்லை. 

என்னிடம் நிறைய உதவி பெற்றவர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. ஆனால், மனோஜ்குமாரின் 12 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்,’’

என்று அந்த பேட்டியில் சிங்கமுத்து கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.