Divya Sathyaraj:எம்.ஜி.ஆர் வரிகள்; மகளுக்காக நெகிழ்ந்து அறிக்கை விட்ட சத்யராஜ்!
நடிகர் சத்யராஜ் தன்னுடைய மகளை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திர நடிகராக நடித்து, பின்னாளில் கதாநாயகனாக உருவெடுத்தவர் நடிகர் சத்யராஜ். 'வேதம் புதிது’ ‘அமைதிப்படை’ ‘ நடிகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த உடனே மீண்டும் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். குறிப்பாக ‘பாகுபலி’ படத்தில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. தொடர்ந்து தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
இவர் இறுதியாக லல் டுடே படத்தில் படத்தின் நாயகியின் அப்பாவாக நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவருக்கு ஒரு சிபிசத்யராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபி திரைத்துறையில் நடிகராக வலம் வரும் நிலையில், மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். தொழில் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக நிகழும் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்தை திவ்யா வைக்க தவறுவதே இல்லை அண்மையில் கூட மருத்துவர் ஷர்மிகா உடல்நலம் குறித்து பேசியதற்கு தன்னுடைய விமர்சனத்தை வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் தன்னுடைய மகளை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “இலங்கை நாட்டில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமைப்பள்ளி, வடக்கு பசுமை சமுதாயம் என்ற பெயரில் என்னுடைய மகள் திவ்யாவும், ஈழத்து காந்தி என அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை அங்கே தொடங்கியுள்ளனர்.
அந்த திட்டத்தை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன். மகிச்சியும் அடைகிறேன். இந்த திட்டத்தில் மக்களுக்கு தேவையான பல பயனுள்ள விஷயங்கள் அடங்கி இருக்கிறது. குழந்தைகள் பயனுள்ள எதிர்காலம் மற்றும் விவசாயம் போன்ற மிக அற்புதமானவற்றை கற்றுக்கொள்வதும், அதில் அந்த குழந்தைகளின் பெற்றோர்களை ஈடுபட செய்வதன் மூலமும் அவர்களுக்கு ஓரு தொழிலை கற்றுக்கொள்வதர்க்கான வாய்ப்பு கிடைக்கிறது.
இதில் என்னுடைய மகளும் பூங்கோதை சந்திரஹாசனும் இணைந்து செயல்படுவதை நினைக்கும் போது எனக்கு மகிச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் வாத்தியாரின் (எம் ஜி ஆர்) ‘நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்ற பாடலில் வருவது போல என்னுடைய மகள் திவ்யாவும் ஈழ தமிழருக்காக உழைப்பார்” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்