இந்தியாவுக்கு எதுக்குடா வந்தீங்க? வெளியானது சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ப்ஸ் வீடியோ! ஈழம் குறித்த கதையா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இந்தியாவுக்கு எதுக்குடா வந்தீங்க? வெளியானது சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ப்ஸ் வீடியோ! ஈழம் குறித்த கதையா?

இந்தியாவுக்கு எதுக்குடா வந்தீங்க? வெளியானது சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ப்ஸ் வீடியோ! ஈழம் குறித்த கதையா?

Suguna Devi P HT Tamil
Published Oct 20, 2024 02:44 PM IST

நடிகரும் இயக்குனருமான எம் சசிகுமாரின் ஃப்ரீடம் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது யூடியூபில் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதுக்குடா வந்தீங்க? வெளியானது சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ப்ஸ் வீடியோ! ஈழம் குறித்த கதையா?
இந்தியாவுக்கு எதுக்குடா வந்தீங்க? வெளியானது சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ப்ஸ் வீடியோ! ஈழம் குறித்த கதையா?

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நந்தன் திரைப்படமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . சத்யசிவா எழுதி இயக்கிய சசிகுமாரின் 'ஃப்ரீடம்' படத்தில் ஜெய் பீம் படப் புகழ் லிஜிமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல பிரபலமான முகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'ஃப்ரீடம்' படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சசிகுமார் தீவிரமான தோற்றத்தில் இருந்தார். தலைப்பிற்குக் கீழ் டேக் லைனாக 'ஆகஸ்ட் 14' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசியல் பிரபலங்களின் வாழ்த்து பெற்ற நந்தன்

இயக்குனர் இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் திருமாவளவன், அன்புமணி மற்றும் அண்ணாமலை உட்பட அரசியல் தலைவர்களும் நந்தன் படத்தை பார்த்த பின்னர் சசிகுமாரின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் மற்றும் ஒரு அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த ஃபிரீடம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தினை விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ஈழத்தின் கதையா?

ஃபிரீடம் படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்த போரினால் தமிழ்நாட்டிற்கு தப்பி வரும் தமிழர்களின் உண்மையான வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. மேலும் குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழ்நாட்டிலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் ஒரு சில காட்சிகளின் அடிப்படையில் பல ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் உட்பட எழுவர் குறித்த கதையாக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்துள்ளது. மேலும் ஈழம் குறித்தான கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க விரும்பிய இயக்குனர் மற்றும் சசிக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.