NaaNaa: நடிகர் சசிகுமார் - சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - எப்போது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naanaa: நடிகர் சசிகுமார் - சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - எப்போது தெரியுமா?

NaaNaa: நடிகர் சசிகுமார் - சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - எப்போது தெரியுமா?

Marimuthu M HT Tamil
Dec 02, 2023 09:10 PM IST

நடிகர் சசிகுமார் - சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார் - சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சசிகுமார் - சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சசிகுமார் மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லை. இவர்கள் இருவரும் இணைந்து என்.வி.நிர்மல் குமார் இயக்கியுள்ள ‘நா நா’ என்னும் ஆக்சன் திரில்லர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கல்பரு பிக்சர்ஸ் என்னும் பேனரில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ளார். இசைப் பணியினை ஹர்ஷவர்தன் ராமேஷ்வரும்; ஒளிப்பதிவு பணியினை கணேஷ் சந்திராவும் மேற்கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட்டை படத்தின் தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘நா நா’ திரைப்படம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்படத்தில் சித்ரா சுக்லா கதையின் நாயகியாகவும், காஷ்டியூம் டிசைனராக வாசுகி பாஸ்கரும் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சரவணனும் செய்துள்ளனர். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும், இப்படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளமும் கைப்பற்றியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.