Robo Shankar Daughter : ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
விரைவில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். பின்னர் தமிழ் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகர் விஷாலின் 'இரும்புத்திரை' அஜித்தின் 'விஸ்வாசம்', தனுஷின் 'மாரி', சிவகார்த்திகேயனினி மிஸ்டர் லோக்கல், ஹீரோ உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் காமெடியனாக நடித்துள்ளார்.
ரோபோ சங்கர் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்தது. தற்போது நலமாக இருக்கிறார்.
ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்கிற மகள் இருக்கிறார். இவரும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். இதுவரை விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தி உடன் விருமன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.அதே போல் சமீபத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான... 'விருமன்' படத்திலும் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா, அதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் போடுவது, புகைப்படங்களை பதிவிடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் விரைவில் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே உறுதி படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்திரஜா தன்னுடைய பெற்றோர் மற்றும் முறைமாமன் குடும்பத்தினரோடு குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது தன்னுடைய மாமாவின் பக்கத்தில் இந்திரஜா போஸ் கொடுத்திருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் பலர் உங்களின் ஜோடி பொருத்தம் அருமை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதிலளித்த இந்திரஜா ஆமாம். ஆனால் இன்னும் திருமணத்திற்கு நாள் குறிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பலரும் இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்