Actor Robo Shankar: வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ரோபோ சங்கர்.. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள அறிவுரை!
நடிகர் ரோபோ சங்கர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் நடிகர் ரோபோ சங்கர் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தின் காரணமாக, கடுமையான மழைப்பொழிந்து வருகிறது. இதனால் சென்னையில் வேளச்சேரி, பெருங்குடி, அசோக் நகர், சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம் ஆகியப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரம் முழுவதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும் சினிமா பிரபலங்களும் அடிப்படைப் பொருட்கள் கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகினர். அதன்படி, நடிகர் ரோபோ சங்கர் தான் குடியிருக்கும் வளசரவாக்கம் பகுதியில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், தனது வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்க காலையில், கடைக்குச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாகவும், அப்போது ஒரு தகரம் தன் காலை பதம்பார்த்துவிட்டதாகவும் சொன்னார்.
மேலும் மளிகைச் சாமான்கள், பால் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனவும்; பால் எங்கும் கிடைப்பதில்லை எனவும்; முடிந்தால் மற்றவர்களுக்கு உதவுங்கள் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்