Actor Prashanth: அவ்வளவு நடந்தும் இப்பவும் ஸ்டாராங்கா.. அப்பா அம்மா அன்பு மட்டும் இல்லன்னா? - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!-actor prashanth exclusive interview about his bonding with dad parenting and also speak about mental health - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Prashanth: அவ்வளவு நடந்தும் இப்பவும் ஸ்டாராங்கா.. அப்பா அம்மா அன்பு மட்டும் இல்லன்னா? - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!

Actor Prashanth: அவ்வளவு நடந்தும் இப்பவும் ஸ்டாராங்கா.. அப்பா அம்மா அன்பு மட்டும் இல்லன்னா? - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 04, 2024 04:44 PM IST

Actor Prashanth: “நம்ம ஒரு பிளான் பண்ணுவோம். ஆனா கடவுள் இன்னொரு பிளான் வச்சிருப்பார்ன்னு சொல்லுவாங்கள்ல, அதுதான் என்னோட வாழ்க்கையில நடந்துச்சு. வீட்ல நான் டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க. - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!

Actor Prashanth: அவ்வளவு நடந்தும் இப்பவும் ஸ்டாராங்கா.. அப்பா அம்மா அன்பு மட்டும் இல்லன்னா?  - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!
Actor Prashanth: அவ்வளவு நடந்தும் இப்பவும் ஸ்டாராங்கா.. அப்பா அம்மா அன்பு மட்டும் இல்லன்னா? - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!

சினிமா மேல பெரிய பிடிப்பு இல்லனாலும், டாக்டருக்கு படிக்கும் போதே, மறைமுகமா சினிமாவுக்கு உங்கள தகுதி படுத்திக்கிட்டு வந்துருந்துருக்கீங்களே?

“நம்ம ஒரு பிளான் பண்ணுவோம். ஆனா கடவுள் இன்னொரு பிளான் வச்சிருப்பார்ன்னு சொல்லுவாங்கள்ல, அதுதான் என்னோட வாழ்க்கையில நடந்துச்சு. வீட்ல நான் டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க. பொதுவாவே டாக்டர் தொழில் அழுத்தம் நிறைந்ததா இருக்கும். அதுக்காக, அதுல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றதுக்காக, டென்னிஸ், குதிரை பந்தயம், டான்ஸ், கராத்தே அப்படின்னு பல விஷயங்கள்ல என்ன அப்பா ஈடுபட வச்சார். ‘An idle mind is the devil's workshop’ அப்படின்னு இங்கிலீஷ்ல பழமொழியே இருக்கு.

 

நாம, நம்ம வாழ்க்கையில எதுவுமே பண்ணாம இருந்தோம் அப்படின்னா, மனசு வேற ஏதாவது பண்ண சொல்லும். அதன் மூலமா, நாம தப்பான வழியில போவதற்கான வாய்ப்பு இருக்கு. நீங்க இப்படி தொடர்ந்து என்கேஜா இருக்கும் போது, உங்க நேரம் முழுக்க ஆக்கப்பூர்வமா மட்டும்தான் பயன்படும். இந்த செயல்முறையில, நீங்க ரிலாக்ஸூம் பண்ணிக்கலாம். அதே நேரம், புதுசா ஒரு விஷயத்த கத்துக்கவும் முடியும். இப்படியான ட்ராக்ல வாழ்க்கை போகும் போது, நம்ம மைண்ட் எப்போதுமே பாசிட்டிவான ட்ராக்லேயே போயிட்டு இருக்கும்.

என்னுடைய அப்பா அம்மாவுடைய அன்புதான்

நீங்க சொல்ற மாதிரி எப்போதுமே நான் சிரிச்சிட்டே, பாசிட்டிவா இருக்கிறதுக்கு இந்த மாதிரியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு நடந்தாலும், நான் இவ்வளவு தூரம் ஸ்ட்ராங்கா இருக்குறதுக்கு காரணமே, என்னோட அப்பா அம்மாவுடைய அன்பும், ரசிகர்களோட அன்பும்தான். அது இரண்டும் என்னோட வாழ்க்கையில இரு பெரும் தூண்கள் அப்படின்னு சொல்லலாம்.

அப்பா அம்மா என்கிட்ட சொல்றதெல்லாம் ஒரே விஷயம்தான். எது வேணாலும் பண்ணு, ஆனா ஒழுங்கா தெளிவா பண்ணு. தப்பு பண்ணாத, தப்பு பண்ணா மன்னிப்பு கேட்றதுக்கு தயங்காதே, யாரையும் மனசளவுல புண்படுத்தாத. அது வார்த்தையாலும் சரி, செயலாளும் சரி, சக மனிதர்களாக ஒழுங்கா ட்ரீட் பண்ணு.. இத அவங்க சொல்லிட்டே இருப்பாங்க. 

என்னோட அப்பா, முன்னாடியெல்லாம் என்ன வாங்க போங்கன்னு கூப்பிடும் போது, என்ன சார் உங்க பையனையே நீங்க, வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க சொல்லுவாங்க. அப்ப, அப்பா சிரிச்சுட்டு போயிடுவார். ஆனா, இன்னைக்கு பல பேர் அவங்களுடைய குழந்தைகளை வாங்க போங்கன்னுதான் கூப்பிடுறாங்க. குழந்தைகளை நாம வாங்க போங்கன்னு கூப்பிடும் போது, நம்மோட குழந்தைகள், மத்தவங்கள இயல்பாவே வாங்க போங்கன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.. அதுதான் நல்ல வளர்ப்புக்கான ஒரு உதாரணம்.. அதே மாதிரி நான் தப்பு பண்ணிட்டேன் அப்படின்னா அதுக்காக உடனே என்ன அடிச்சு, கண்டிக்க மாட்டாங்க.

அன்பாலாயே திருத்துவாங்க

அந்த தப்ப அவங்க அன்பாலயே நமக்கு புரிய வைப்பாங்க. உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்லணும்னா, அப்பா அடிக்கடி வெளிநாட்டுக்கு போவார்.. அப்படி ஒரு நாள் வெளிநாட்டுக்கு போயிட்டு வரும் போது, ரொம்ப காஸ்ட்லியான ஒரு பொருளை எனக்காக வாங்கிட்டு வந்தார். ஆனா இரண்டாவது நாளே அத ஒடச்சிட்டேன்.. இத எங்க அப்பா அம்மா வந்து பார்த்தாங்க.. என்ன அடிக்கப்போறாங்கன்னு ரொம்ப பயந்துட்டேன். ஆனா அவங்க அப்படி செய்யல, அவங்க என்கிட்ட சொன்னது… இங்க பாரு, பொருள வாங்கிட்டு வந்தது என்னோடபொறுப்பு.. அதே மாதிரி அத பத்திரமா பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. அத பத்திரமா பாத்துக்கலன்னா அப்படின்னா, அந்த பொருள் உன்கிட்ட இருக்காதுன்னு சொன்னாங்க. அது எனக்கு வேறு மாதிரியான புரிதல கொடுத்துச்சு” என்று பேசினார்.

முழு பேட்டி விரைவில்..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.