23 Years of Budget Padmanabhan: ‘எண்ட டான்ஸ் கதகளி’ மறக்க முடியாத விவேக் காமெடி! குடும்ப பட்ஜெட் மகத்துவத்தை சொன்ன படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  23 Years Of Budget Padmanabhan: ‘எண்ட டான்ஸ் கதகளி’ மறக்க முடியாத விவேக் காமெடி! குடும்ப பட்ஜெட் மகத்துவத்தை சொன்ன படம்

23 Years of Budget Padmanabhan: ‘எண்ட டான்ஸ் கதகளி’ மறக்க முடியாத விவேக் காமெடி! குடும்ப பட்ஜெட் மகத்துவத்தை சொன்ன படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 08, 2023 05:10 AM IST

தமிழ் சினிமாவில் சிறந்த பேமிலி எண்டர்டெயினர் படங்களில் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறக்கூடிய படமாக பட்ஜெட் பத்மநாபன் அமைந்திருக்கும். வெறும் குடும்ப படமாக இல்லாமல் காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து ஜனரஞ்சக விஷயங்களும் இடம்பிடித்திருக்கும் படமாக இது உள்ளது.

பட்ஜெட் பத்மநாபன் படத்தில் பிரபு, மும்தாஜ், ரம்யா கிருஷ்ணன்
பட்ஜெட் பத்மநாபன் படத்தில் பிரபு, மும்தாஜ், ரம்யா கிருஷ்ணன்

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கேஆர்ஜி படத்தை தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்தின் கதையை படமாக எடுக்க பல்வேறு தயாரிப்பாளர்கள் முன் வராத நிலையில், தயாரிப்பாளர் கேஆர்ஜி சம்மதம் தெரிவித்த நல்ல லாபத்தையும் சம்பாதித்தார். அத்துடன் படத்துக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த குடும்ப படத்துக்கான விருதும் கிடைத்தது.

பிரபு, ரம்யா கிருஷ்ணன், விவேக், மும்தாஜ், கரண், மணிவண்ணன், கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் கதை ஒரு காலனிக்குள் நடைபெறும் விதமாக அமைந்திருக்கும் நிலையில், சென்னையிலுள்ள அருணாச்சலா ஸ்டூடியோஸில் மிக பெரிய அளவில் செட் போட்டு முழு படத்தையும் படமாக்கினர்.

கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சிறிய வயதில் இழந்த வீட்டை பெரியவன் ஆனதும் பிரபு மீட்பதே படத்தின் ஒன்லைன். இதில் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கும் மிடிஸ் கிளாஸ் குடும்பஸ்தனாக வரும் பிரபு பட்ஜெட் போட்டு வாழ்க்கை வாழ்வதை காமெடி கலாட்டவுடன் சொல்லியிருப்பார்கள், மும்தாஜ் - கரண் இடையிலான காதல், அவர்களின் வாழ்க்கையில் பிரபு எதிர்பாராதவிதமாக இணைவது என சீரிஸாகவும் படம் சில நிமிடங்கள் செல்லும். காமெடி, சென்டிமெண்ட், காதல் என அனைத்து விஷயங்களையும் கலந்து குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் விதமான திரைக்கதையுடன் பட்ஜெட் பத்மநாபன் படத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர் டி.பி. கஜேந்திரன்.

பிரபு வீட்டில் கேரளாவை சேர்ந்த வேலைக்காரி போல் வரும் மும்தாஜை உஷார் படுத்து விவேக் அடிக்கும் காமெடி லூட்டி எப்போது பார்த்தாலும் சிரிக்கும் விதமாக இருக்கும். " எண்ட பாஷை மலையாளம், எண்ட ஸ்டேட் கேரளம், எண்ட டான்ஸ் கதகளி" என கூறும் வசனம் வயிற்றை புண்ணாக்கும் விதமாக இருக்கும்.

வைரமுத்து பாடல் வரிகள் எழுத எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தில் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தன. பக்காவா போடுவான் பத்மநாபன் பட்ஜெட் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த படாலாக இருந்தது. குடும்ப பட்ஜெட் நிர்வகிக்கு கதையை, பட்ஜெட் செலவில் ஜனரஞ்சமான முறையில் உருவாக்கி ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலையும் பெற்று தந்த பட்ஜெட் பத்மநாபன் படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.