Prabhu: என்னாச்சு… மருத்துவனையில் பிரபு… ரசிகர்கள் கதறல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prabhu: என்னாச்சு… மருத்துவனையில் பிரபு… ரசிகர்கள் கதறல்

Prabhu: என்னாச்சு… மருத்துவனையில் பிரபு… ரசிகர்கள் கதறல்

Aarthi V HT Tamil
Feb 22, 2023 06:17 AM IST

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரபு
பிரபு

அவரின் உடல் நிலை குறித்து கேளம்பாக்கத்தில் அமைந்து இருக்கும் மெட்வே மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு, நேற்று இரவு ( பிப்ரவரி 21) சிறுநீரகப் பிரச்னை காரணமாக காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறு நீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இதை தொடர்ந்து ரசிகர்கள் விரைந்து அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் அவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு பிரபுவை விசாரித்து வருகின்றனர்.

நடிகர் பிரபு கடைசியாக வாரிசு படத்தில் சரத்குமாரின் நெருங்கிய நண்பராகவும், மருத்துவராகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.