Rachna Banerjee: முதல் முறையாக எம்பி ஆக தேர்வான பார்த்திபன் பட ஹீரோயின்! மேலும் மூன்று பேர் வெற்றி
மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்றவர் ரச்சனா பானர்ஜி. தமிழில் கார்த்திக், பார்த்திபன் பட ஹீரோயின் ஆக நடித்த இவர், தற்போது மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல் முறையாக எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை போல் மேலும் மூன்று பேர் நடிகர்கள் முதல் மறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.
கடந்த 1990களில் சினிமாக்களில் ஹீரோயினாக வலம் வந்தவர் ரச்சனா பானர்ஜி. மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்காலி, ஒடியா, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
1991இல் மிஸ் கொல்கத்தாவாக தேர்வு செய்யப்பட்ட இவர், மிஸ் இந்தியா போட்டியில் மிஸ் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் பட்டத்தை வென்றார். அழகி போட்டிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை இவர் வென்றுள்ளார்.
எம்பியாக தேர்வான ரச்சனா
இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ல கூக்ளி தொகுதியில் போட்டியிட்டார்.
இதில் பாஜகவை சேர்ந்த லாக்கேட் சாட்டார்ஜி என்பவரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் ரச்சனா. இதன் மூலம் அவர் கூக்ளி தொகுதியின் எம்பி ஆகியுள்ளார்.
இந்த தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் பாஜக 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறை பாஜவிடம் இருந்து ரச்சனா மீட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் முக்கிய தொகுதியாக கருதப்பட்ட கூக்ளியில் இந்த முறை மொத்தம் 12 முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தனது பிரபலம், செல்வாக்கு மூலம் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரச்சனா
கடந்த 1993இல் இருந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரச்சனா பானர்ஜி. கார்த்திக் நடித்த பூவரசன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து பார்த்திபன் ஜோடியாக வாய்மையே வெல்லும், வி ஆர் நாட் டாட்டா பிர்லா ஆகிய படங்களில் நடித்தார்.
தெலுங்கிலும் பல படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.
அதேபோல் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்துள்ளார். தற்போது அரசியல் பிரவேசத்தில் களமிறங்கியிருக்கும் ரச்சனா எம்பி ஆகவும் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கவுள்ளார்.
முதல் முறையாக எம்பி
நடிகை, தொழிலதிபர், டிவி பிரபலம் என இருந்து வந்த இவர், முதல் முறையாக எம்பி என்ற புதிய பொறுப்பையும் ஏற்கிறார்.
இவரை போல் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மேலும் இரண்டு நடிகைகள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக எம்பியாக தேர்வாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார்கள்.
அதன்படி, பெங்காலி நடிகையான ஜூன் மாலியா மேதினிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு பெங்காலி நடிகையான சயோனி கோஷ், ஜாதவ்பூர் என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார்.
இவர்களை போல் கேரளாவில் மலையாள சினிமா நடிகரான சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார். இவர்கேரளா சார்பில் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் பாஜக எம்பி என்ற பெருமையை பெறுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.