Actor Mohan: 'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' நடிகர் மோகனின் புதிய படம்-பெங்கல் தினத்தில் படக்குழுவின் சர்ப்ரைஸ்!
கடைசியாக 2008 இல் சுட்ட கோழி படத்தில் நடித்த மோகன், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்து ஓய்வு எடுத்திருந்தார்.
திங்கட்கிழமை பொங்கல் பண்டிகையையொட்டி, மோகனின் படமான ஹராவின், ப்ரோமோ வீடியோ வெளியானது. இதில் அவர் இடம்பெறும் ஒரு காட்சி வந்துள்ளது. விஜய் ஸ்ரீ ஜி இயக்கி வரும் ஹரா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
ஒரு காலத்தில் இவரது படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. மெளன ராகம், இதய கோயில், விதி, மெல்ல திறந்தது கதவு என பல படங்களில் நடித்துள்ளார். இவரது படத்தில் பாடல்கள் அனைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இவரை மைக் மோகன் என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இந்நிலையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் பிரவேசித்துள்ளார் மோகன்.
இந்த வீடியோவில் நடிகர் மோகன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதைக் காட்டுகிறது, அவர் ஸ்டைலாக நடந்து, சன்கிளாஸ் அணிவது போன்று காட்சி வெளியாகியுள்ளது. இப்படத்தில் 93 வயதான நடிகர் சாருஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் நடிகை அனுமோல் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹரா படத்தில் சுரேஷ் மேனன் வில்லனாகவும், வனிதா விஜயகுமார் அமைச்சராகவும் நடித்துள்ளனர். யோகி பாபு, ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடைசியாக 2008 இல் சுட்ட கோழி படத்தில் நடித்த மோகன், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்து ஓய்வு எடுத்திருந்தார். விஜய் ஸ்ரீ ஜி இதற்கு முன்பு பவுடர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
குழந்தைகளிடையே குட் டச், பேட் டச் போன்ற பிற நல்ல கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே படத்தின் முக்கிய கருவாகும்.
ஹரா படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள நிலையில், வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
ப்ரோமோ வீடியோ இதோ..
டாபிக்ஸ்