CWC Final: முதன் முறையாக ஆண் வெற்றி.. குக் வித் கோமாளி சாம்பியன் ஆனார் ‘மைம் கோபி’
இறுதியில் சிறப்பான உணவு தயாரித்த மைம் கோபி, குக் வித்கோமாளி சீசன் 4ன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
விஜய் டிவியில் ஒளிரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் அதிகமானவர்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருப்பது, குக் வித் கோமாளி. 3 சீசன்கள் மெகா வெற்றியைத் தொடர்ந்து நான்காவது சீசன் தொடர்ந்து நடந்து வந்தது.
இறுதிப் போட்டி இன்று நேரலையாக ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியின் நடுவர்களாக ஃசெப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளாராக லக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் செயல்பட்டனர்.
பைனலில் கிரண், ஷிவாங்கி, ஷிருஷ்டி, ஆண்ட்ரியன், மைம் கோபி, விஜித்ரா ஆகிய 6 பேர் தேர்வாகியிருந்தனர். இந்த 6 பேரும் குக்காக தொடர்ந்த நிலையில், இவர்களுக்கு உதவியாக தலா இரு கோமாளிகள் இருந்தனர்.
இறுதியில் சிறப்பான உணவு தயாரித்த மைம் கோபி, குக் வித்கோமாளி சீசன் 4ன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோமாளியாக குரேஷி மற்றும் மோனிஷா ஆகியோர் உதவி செய்தனர்.
நடுவர்கள் இந்த முடிவை அறிவித்ததும், அரங்கம் அதிர குக்குகளும், கோமாளிகளும் கொண்டாடித்தீர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடந்த 4 சீசன்களில் முதன்முறையாக ஒரு ஆண் சமையல் கலைஞர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மைம் கோபி மற்றும் கோமாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இது தவிர, சிறப்பாக செயல்பட்ட கோமாளிகள் மற்றும் குக்குகளுக்கும் தனித்தனி பரிசுகள் பல்வேறு ஜனர்களில் வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.