Actor Livingston: விஷாலால் வந்த வினை; ஆபாச படம் எடுக்கப் போகிறேன்’- லிவிங்க்ஸ்டன்
பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் விஷாலை குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது,"இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் ஆபாச படம்தான். ஆனால் அந்தப்படம் நன்றாகத்தான் ஓடியது. நான் அடுத்ததாக எடுக்க இருக்கும் திரைப்படம் ஆபாசப்படம்தான். ஜனங்களுக்கு எது பிடிக்குமோ, அதைத்தான் நான் பிரமாண்டம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய படத்தின் மொத்த செலவே 1 1/4 கோடிதான். சினிமா என்பது ஒரு கமர்ஷியல் மீடியா. நீங்கள் அதை திருத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.
நீங்கள் திருத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள். படத்தை ஓட வைக்க நான் என்னவேண்டுமென்றாலும் செய்வேன். நான் படம் எடுக்க எந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் பணம் தரப்போவதில்லை. ஆகையால்தான் நானே களத்தில் இறங்கி இருக்கிறேன். இத்தனை வருடம் சினிமாவில் எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்தும், தொடர்புகளை வைத்தும் பெரிய நடிகர்களை அணுகியெல்லாம் படம் செய்ய முடியாது. என்னை அவர் வாசலில் கூட சேர்க்கமாட்டார்கள்.
முதலில் இந்தப்படத்தையே நாங்கள் பார்ட்னர்ஷிப்பில்தான் எடுப்பதாக இருந்தோம். ஆனால், விஷால் சிறுபட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம் அதனால் நஷ்டம் ஏற்படும் என்று செய்தி வெளியிட்ட காரணத்தால், இணை தயாரிப்பாளர் ஒருவர் பின்வாங்கி விட்டார். இப்போது நிலத்தை விற்று நானே படம் எடுக்கப்போகிறேன்.
விஷால் சொன்னது பல பேரை பாதித்து இருக்கிறது. அவரால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனக்கு பல்வேறு துறைகளில், பல்வேறு பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனக்கு கிறிஸ்துவ மதமே போர் அடித்து விட்டது. அதனால் நான் தற்போது கிருஷ்ணர் பக்தராக மாறிவிட்டேன். " என்று பேசினார்
நன்றி:கலாட்டா
டாபிக்ஸ்