11 Years of Kazhugu: 'பாதகத்தி கண்ணு பட்டு' யுவனின் ராஜாங்கத்தில் பறந்த கழுகு
காதல், வில்லனுடன் மோதல், ரத்த தெறிக்க க்ளைமாக்ஸ் என வழக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும் கதையின் நாயகனாக வரும் கிருஷ்ணாவின் கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. யுவனின் இசையில் பாடல்கள், பின்னணி இசை பட்டைய கிளப்ப படம் ரசிகர்களை கவர்ந்து வசூலையும் குவித்தது.
கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அறிமுக இயக்குந சத்யசிவா இயக்கத்தில் 2012இல் வெளியான படம் கழுகு. 1981இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கழுகு படத்தின் டைட்டிலை முறையாக அனுமதி பெற்று இந்தப் படத்துக்கு வைத்தனர்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை கீழே சென்று மேலே பத்திரமாக எடுத்து வரும் கதாபாத்திரத்தில் வரும் ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ப்ரஷ்ஷாகவே இருந்தது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் என்றாலே டுயட் பாடல் அல்லது காமெடி, காதல் போன்ற காட்சிகளை வைத்த பழக்கப்படுத்தி வந்த க்ளிஷேவை, சீட் நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படங்களின் மூலம் இயக்குநர் பாலுமகேந்திர மாற்றி அமைத்தார்.
இதை நூல் போல் பிடித்துக்கொண்டு பல இயக்குநர்கள் திகில், த்ரில்லர் படங்களை இதுபோன்ற ரம்மியமான மலை பகுதியில் உருவாக்கி வந்தனர். ஆனால் அந்த மலை கிராமங்களிலேயே பிறந்து, வாழ்ந்து வரும் மண்ணின் மைத்தன் பற்றி படமாக இருந்தது கழுகு.
கதை என்பது காதல், வில்லனுடன் மோதில், இறுதியில் ரத்த தெறிக்க க்ளைமாக்ஸ் என கமர்ஷியல் படத்துக்கான அம்சங்கள் அச்சு பிசாகாமல் இருந்தாலும், படத்தை எடுத்த விதத்தில் இயக்குநர் கவனம் ஈர்த்தார்.
Sucide Point என்று சொல்லப்படும் இடத்தில் இருந்து கீழே குதித்து ஆண் அல்லது பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை என நாளிதழ்கள், டிவியில் வரும் செய்திகளை பார்த்துள்ளோம். அப்படி இறந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கென்று அந்த பகுதியில் மீட்பாளர்கள் இருந்து வருகிறார்கள். அந்த மீட்பாளர்களின் வாழ்க்கை, அவர்களின் சந்தோஷம், துக்கம் போன்ற நிகழ்வுகள் மிகவும் எதார்த்தமாகவும், அதே சமயம் எந்தவொரு இடத்திலும் சுணக்கம் அடையாமலும் மிகவும் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
படம் நடைபெறும் கதைகளமே அதன் அழகியலை கூட்டிய நிலையில், யுவனின் இசை அதை மேலும் மெருகேற்றியது. ஆத்தாடி மனசு தான், பாதகத்தி கண்ணுபட்டு பாடல்களில் மெலடி இதம் தந்த யுவன், ஆம்பளைக்கும் பொம்பலைக்கும் பாடல் மூலம் துள்ளல் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்தார்.
க்ளைமாக்ஸ் தவிர தனிப்பட்ட முறையில் சொல்லும் விதமாக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய காட்சிகள் இல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது. இதனால் கலவையான விமர்சனைங்கள் படத்தின் ரிலீஸின்போது பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸிலும் கணிசமான வசூலை பெற்றது.
2012, மார்ச் 16இல் ரிலீசான இந்தப் படம் அந்த ஆண்டில் நல்ல வசூலை குவித்த பட்ஜெட் படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
டாபிக்ஸ்