Actor Kavin: ‘ நான் மன்னிப்புக்கேட்டுக்குறேன்’ - லேட்டாக வருவதாக சொன்ன தயாரிப்பாளருக்கு கவின் நக்கல் பதிலடி!-actor kavin reply to the producer allegation of delay in shooting - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Kavin: ‘ நான் மன்னிப்புக்கேட்டுக்குறேன்’ - லேட்டாக வருவதாக சொன்ன தயாரிப்பாளருக்கு கவின் நக்கல் பதிலடி!

Actor Kavin: ‘ நான் மன்னிப்புக்கேட்டுக்குறேன்’ - லேட்டாக வருவதாக சொன்ன தயாரிப்பாளருக்கு கவின் நக்கல் பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 10, 2024 07:39 AM IST

தயாரிப்பாளர் ஒருவர் கவின் தாமதமாகி வந்தாலும், நீண்ட நேரம் கேரவனிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்று புகார் கூறியிருந்தார். அதற்கு தற்போது கவின் மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகர் கவின்!
நடிகர் கவின்!

வெள்ளித்திரையில் நடிகராக வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தவருக்கு, சத்ரியன் படத்தில் துணை கதாபாத்திரம் கிடைத்தது. அதனைதொடர்ந்து  ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைக்கொடுக்க வில்லை. 

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நண்பனுக்காக நின்றது, லாஸ்லியாவுடனான காதல் சர்ச்சை உள்ளிட்டவை அவரை இன்னும் பிரபலம் ஆக்கியது. 

அதன் பின்னர் வினித் இயக்கத்தில் உருவான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த நிலையில், அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் ஸ்டார் மற்றும் ரொமன்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் ஒருவர் கவின் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. தாமதமாகி வந்தாலும், நீண்ட நேரம் கேரவனிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்று புகார் கூறியிருந்தார். இதற்கு கவின் மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கவின் பேசும் போது, “ ஏதாவது லேட் ஆகி விட்டதா? நான் எத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்லி இருந்தார்களா? கேட்க, கூட்டத்தில் இருந்து ஏழு மணி என்று பதில் வந்தது. 

அதனை தொடர்ந்து பேசிய கவின், என்னிடமும் ஏழு மணிக்கு என்று சொல்லி இருந்தார்கள். ஆறு மணியில் இருந்து நானும் ரெடியாகதான் இருந்தேன். ஆனால், என்னைக்கூப்பிட வந்தவர்கள் 6.45க்குதான் வந்தார்கள். அவர்களுக்கும் சேர்த்து நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.” என்று பேசினார்.

முன்னதாக, நடிகர் கவின் கடந்த வருடம் நீண்ட நாள் தோழியான மோனிகாவை கடந்த ஆண்டு கரம் பிடித்தார். இந்த நிலையில் நடிகை லாஸ்லியாவிடம் இது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

இது குறித்து லாஸ்லியா பேசும் போது, “பிரேக் அப் ஆனால் சாதரண மனிதனுக்கு எப்படி வலிக்குமோ, அதே போலதான் எனக்கும். அந்த சமயத்தில் நாம் ஒரு விதமான மனநிலையை கடப்போம். இங்கு யாருமே, யாருக்கும் அட்வைஸ் செய்ய முடியாது. காரணம், நான் பார்த்த விஷயத்தை அவர்கள், அவர்களது வாழ்க்கையில் பார்த்து இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வேறு வகையான விஷயத்தை பார்த்து இருப்பார்கள். நான் என்னுடைய வலிதான் மிகப்பெரியது என்று நினைத்து இருப்பேன். ஆனால், இன்னொருவர் கதையை கேட்கும் போதுதான் தெரியும், அது அதை விட பெரியது என்று. எனக்கு இது போன்று பிரேக் அப் நடந்தால், அப்படியே அதில் உட்கார்ந்து விட முடியாது. அடுத்ததை பார்த்து சென்றுதான் ஆகவேண்டும். கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் நாம் கடந்து சென்றுதான் ஆக வேண்டும். நமக்காக யாரும் இங்கு காத்திருக்க மாட்டார்கள். இங்கு இருக்கும் நேரமும் யாருக்கும் காத்திருக்காது. ஆகையால் அடுத்ததை பார்த்து சென்று கொண்டிருக்க வேண்டியதுதான். நான் இப்போது செய்திருக்கும் இந்த பிரேக் அப் பாடலுக்கும், கவின் திருமணம் செய்ததிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அவரது திருமணத்தை பார்த்து எனக்கு எதுவும் தோன்றவில்லை. அவர் அவரது வாழ்க்கையை பார்த்துக்கொண்டு, சூப்பராக சென்று கொண்டிருக்கிறார். அதில் நான் என்ன கமெண்ட் சொல்லமுடியும் அவருடைய பர்சனல் வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் மிகவும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை பார்க்கும் போது உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதில் கவலைப்படுவதற்கென்று எதுவும் இல்லை. மூன்றாவது நபர் இருவரையும் கனெக்ட் செய்து பேசினால் அதனை நாம் எதுவுமே செய்ய முடியாது.” என்று பேசினார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.