27 years of Ullathai Allitha: 90-ஸின் 'அழகிய லைலா' கார்த்திக் - கவுண்டமணி கூட்டணி மேஜிக் 'உள்ளத்தை அள்ளித்தா'!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  27 Years Of Ullathai Allitha: 90-ஸின் 'அழகிய லைலா' கார்த்திக் - கவுண்டமணி கூட்டணி மேஜிக் 'உள்ளத்தை அள்ளித்தா'!

27 years of Ullathai Allitha: 90-ஸின் 'அழகிய லைலா' கார்த்திக் - கவுண்டமணி கூட்டணி மேஜிக் 'உள்ளத்தை அள்ளித்தா'!

Karthikeyan S HT Tamil
Jan 15, 2024 07:34 AM IST

சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி 'பிளாக் பஸ்டர்' வெற்றியைப் பெற்ற 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் 1996 ஆம் ஆண்டு இதே ஜனவரி 15 ஆம் நாளில் வெளியாகியது.

உள்ளத்தை அள்ளித்தா
உள்ளத்தை அள்ளித்தா

அந்தவரிசையில் கார்த்திக்கின் நடிப்பில் 1996-ல் வெளிவந்த திரைப்படம்தான் 'உள்ளத்தை அள்ளித்தா'. ரம்பா, கவுண்டமணி, செந்தில், கசன் கான், மணிவண்ணன், ஜெய்கணேஷ், பாண்டு, விச்சு விஸ்வநாத் என பல நடிகர் பட்டாளம் இப்படத்திற்கு உரம் போட்டது. சுந்தர் சி இயக்கிய இப்படத்திற்கு சிர்பி இசையமைத்துள்ளார். பாடல்களை பழனி பாரதி எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோவாக முதலில் விஜய்யைத்தான் அணுகினார்களாம். கால்ஷீட் பிரச்சினை. படத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என்கிற நெருக்கடி காரணமாக கார்த்திக் உள்ளே வந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலை 90-ஸின் 'ரா நூ காவாலய்யா' எனலாம். அந்தஅளவுக்கு ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

மிலிட்டரி ஆஃபிசரின் மகன் கார்த்திக். தந்தையின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் ஊட்டிக்கு தப்பிச் செல்கிறார். அங்கு பிராடு வேலைகளைச் செய்து பிழைக்கும் கவுண்டமணியின் வீட்டில் தங்குகிறார். ரம்பாவைப் பார்த்ததும் உடனே காதலில் விழுகிறார். பல ஆள்மாறட்டக் காட்சி, கலகலப்பு, சண்டை என படம் முழுவதும் ஒரே காமெடி சரவெடி தான்.

இயக்குநர் மணிவண்ணனின் ரூட்டை மாற்றி அவரை பிஸியான நகைச்சுவை நடிகராக்கியதும் இந்தப் படம்தான். கார்த்திக் + கவுண்டமணி + சுந்தர்.சி கூட்டணியில் ஏராளமான திரைப்படங்கள் இதற்குப் பிறகு வெளிவந்தன.குளுகுளு ஊட்டியைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் காதல், நகைச்சுவைத் திரைப்படமாக 'உள்ளத்தை அள்ளித்தா'வுக்கு ரசிகர்களின் மனதில் இன்றைக்கும் தனியிடம் உண்டு.

திகட்டாத நகைச்சுவையை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்த 'உள்ளத்தை அள்ளித்தா' 1996 ஆம் ஆண்டு இதே ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படம் வெளிவந்து இன்றோடு 27 ஆண்டுகள் ஆகின்றன. தமிழகம் முழுவதும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளி வந்து இன்றோடு 27 ஆண்டுகளை கடந்து 28வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால், 27 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் கார்த்திக், கவுண்டமணியின் காமெடி எக்ஸ்பிரஸூக்கு இந்தப்படமும் ஒரு மைல்கல்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.