கார்த்திக்கின் மெய்யழகன் ஓடிடியில் வெளியாகும் தேதி உறுதியானது! தீபாவளி ட்ரீட் கன்பர்ம்!
96 பட புகழ் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தின் ஓடிடி தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
96 பட புகழ் இயக்குனர் பிரேம் இயக்குனர் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தின் ஓடிடி தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் நடித்து இருந்தார். குறிப்பாக இப்படம் இயக்குனர் பிரேமின் முந்தைய படமான 96 வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை சூர்யா ஜோதிகாவின் பட நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது.
மெய்யழகன் ஓடிடி
முதலில் மெய்யழகன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 25 அன்று வெளியாகும் எனத்தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது அது இரண்டு நாட்கள் தள்ளி அக்டோபர் 27 அன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களில் தீபாவளி விடுமுறை வருவதால் அதனை கணக்கில் வைத்து இந்த வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழகளில் வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது.
வசூலில் தொய்வு
இப்படம் வெளியான அதே தேதியில் நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடித்த லப்பர் பந்து படம் வெளியாகி இருந்தது. லப்பார் படத்தின் மாபெரும் வெற்றியினால் மெய்யழகன் படத்தின் வயசூல் சரியத் தொடங்கியது. மேலும் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த இரண்டாம் உலகப்போர் படமும் வெளியாகி இருந்தன. மெய்யழகன் படத்தின் மெதுவான திரைக்கதையினால் படம் எதிர்ப்பார்த்த வசூலை பெற வில்லை. இருப்பினும் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவர்ப்பாய் பெற்றிருந்தது. பல குடும்ப ரசிகர்களும் இப்படத்திற்கு தொடர்ந்து சென்று வந்தனர்.
6 ஆண்டுகள் இடைவெளி
இயக்குனர் பிரேம் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை வைத்து 96 படத்தை 6 வருடங்களுக்கு முன்பு வெளியானது. தனது பள்ளிப்பருவ காதலியை சந்தித்த கதாநாயகன் மற்றும் அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளின் கோர்வையே படத்தின் கதையாக அமைந்தது. மேலும் 96 படம் ஒவ்வொருவரது பள்ளிப் பருவ காதலை மனதிற்குள் கொண்டு வந்தது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. முழுக்க உணர்வுகளின் வாயிலாக கதையை பிரதிபலித்து ஒரு மாபெரும் வெற்றிப் படமாக 96 படத்தை உருவாக்கி இருந்தார்.
6 ஆண்டுகளுக்கு பின் மெய்யழகன் வழியாக அதே உணர்வுகளை கதைகளின் வாயிலாகவும், அதன் கதாபாத்திரங்கள் வாயிலாகவும் கடத்தி இருப்பார். அருள்மொழி வர்மனாக அரவிந்த் சாமி மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு வரும் அருள் மொழி வர்மனின் உணர்வுகளையும், உறவுகளையும் காட்டி ரசிகர்களை மனம் உருக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம். கிராமத்து ஆளாக வரும் கார்த்தி மிகவும் அற்புதமான வெள்ளந்தி காரராக வந்துள்ளார். படத்தின் கதையும், காட்சி அமைப்புகளும் பார்வையாளர்களை அவர்களது சொந்த ஊரின் நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது. இந்த நினைவுகளை வைத்தி இயக்குனர் பிரேம் ஸ்கோர் செய்து வருகிறார்.
டாபிக்ஸ்