27 Years of Poovarsan: வேஷ்ட் சட்டையில் கிராமத்து இளைஞான கலக்கிய கார்த்திக்! ரசிகர்களை திருப்திபடுத்திய பக்கா மசாலா படம்
கார்த்திக் நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகி அவரது ரசிகர்களை திருப்திபடுத்திய படமாக பூவரசன் இருந்தது. படத்தின் காமெடி, பாடல்கள் போன்றவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
கிராமத்து பின்னணியில் கார்த்திக் நடித்து பேமிலி செண்டிமென்ட், காதல், காமெடி நிறைந்த பக்கா மசாலா படமாக வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்ற படம் பூவரசன். தென்தமிழ்நாடு குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் கார்த்திகுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.
சினிமா வந்த புதிதில் ரொமாண்டிக் ஹீரோவாக அறியப்பட்ட கார்த்திக், பின்னர் தனக்கென ஒரு இமெஜ், ரசிகர் வட்டம் உருவானதும் கிராமிய கதைகளில் அதிகமாக நடிக்க தொடங்கினார். அதுவரை சிட்டி பாயாக சார்மிங்கான நடிப்பை இளைஞர்களையும், பெண்களை கவர்ந்த கார்த்திக், பின்னர் வேஷ்ட் சட்டையுடன் ஆக்ஷன், சென்டிமெண்ட் அவதாரத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
அந்த வகையில் கிராமத்து இளைஞனாக துறுதுறுப்பான நடிப்பையும், அதிரடியில் மிரட்டவும் செய்திருப்பார் கார்த்திக். கார்த்திக் ஜோடியாக ரச்சனா பானர்ஜி என்ற பெங்காலி நடிகை நடித்திருப்பார். காமெடிக்கு செந்தில், கவுண்டமணி, வில்லத்தனத்துக்கு ராதா ரவி, ஊர் பெரியவராக விஜயகுமார், தாய் செண்டிமெண்டுக்கு சுஜாதா என கிராமத்து படத்துக்கான பக்கா ஸ்கெட்சில் இந்த படம் அமைந்திருக்கும்.
சிறுவயதில் காணாமல் போன குழந்தை, பெரியவனானதும் தனது தந்தை, தாயை வந்து தானாக சேருவதுதான் படத்தின் ஒன்லைன். இடையே காதல், காமெடி உள்பட இன்னிபிற அம்சங்களை சேர்ந்து சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருப்பார்கள். இருப்பினும் படத்துக்கு கிராமிய பகுதிகளில் கிடைத்த வரவேற்பு நகர பகுதிகள் கிடைக்காமல் போனது. இதனால் வசூலிலும் தடுமாற்றம் கண்டது.
மலையாள படங்களின் தமிழ் ரீமேக்கில், குறிப்பாக ஃபாசில் படங்களில் வசனகர்த்தாவாக பணிபுரிந்த கோகுல கிருஷ்ணா பூவரசன் படத்தை இயக்கியிருப்பார். 1980களிலேயே இயக்குநராக அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கார்த்திக் நடிப்பில் முத்துக்காளை படத்தை இயக்கினார்.
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பினார் அடுத்து பூவரசன், பின்னர் உதவிக்கு வரலாமா என தொடர்ச்சியாக மூன்று படங்களை கார்த்திக்கை வைத்து இயக்கினார். இந்த மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் பெரிய லாபத்தை பெற்று தரவில்லை.
பூவரசன் படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடி ரசிக்கும் வகையில் அமைந்திரு தமிழ் டிவி சேனல்களில் அதிகம் ஒளிபரப்பு செய்யப்படும் காமெடிகளில் ஒன்றாக உள்ளது.
வாலி பாடல் வரிகளுக்கு இளையராஜா இசையமைக்க, கட்டிக்கிடலாம் ஓட்டிக்கிடலாம், இந்த பூவுக்கொரு அரசன் பாடல்கள் ஆகியவை ஹிட்டாகின. இளையராஜாவின் 90ஸ் ப்ளே லிஸ்டில் இந்த இரண்டு பாடல்களும் இடம்பிடித்துள்ளன.
பழிக்கு பழி என்ற பழக்கமான கதையில் எக்கச்சக்க மசாலா அம்சங்களை பூசிய திரைக்கதையுடன் அமைந்து கார்த்திக் ரசிகர்களை திருப்திபடுத்திய படமாக இருந்த பூவரசன் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்