கார்த்தி பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
விருமன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பருத்திவீரன் படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி கிராமத்து இளைஞனாக நடித்து இருக்கும் படம், 'விருமன்'. இயக்குநர் முத்தையா இயக்கி இருக்கும் இந்த படம் குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விருமன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
'விருமன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் நடிகர் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், சிங்கம் புலி, வடிவுக்கரசி, ராஜ் குமார், மனோஜ் பாரதிராஜா, ரிஷி உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக, ஷங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கிறார்.
விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால பாடலின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில் கஞ்சா பூவு கண்ணால பாடல் வரும் மே 25 ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதை கார்த்தி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
விருமன் திரைப்படம் வரும் 31 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
டாபிக்ஸ்